பக்கம்:அறிவியல் அகராதி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bob

56

bon


bob - குண்டு: ஊசல் குண்டு. (இய)

bobbin - நூலடக்கி: தைக்க அல்லது நெய்வதற்குரிய நூல் சுற்றப்படும் கருவி. (தொழி)

body - உடல்: இது விலங்குடல், தாவர உடல், மனித உடல் என மூன்று வகைப்படும். மனித உடலில் மட்டுமே திட்டமான உறுப்பு வேறுபாடு உண்டு. தலை, கழுத்து, உடம்பு, புறத்துறப்புகள் என அது உறுப்பு வேறுபாடு கொண்டதாகும். உடம்புக்கு வேறு பெயர் நடுவுடல். பா.trunk. (உயி)

body cavity - உடற்குழி விலங்குடலின் உட்குழி. பா. coelom. (உயி)

Bohr atom - போர் அணு: தம் கொள்கையில் போர் முன்மொழிந்தற்கேற்ற அமைப்புள்ள அணு மாதிரி. இது போர் சுற்று வழியையும் ஆரத்தையுங் கொண்டது. (இய)

Bohr effect - போர் விளைவு: கரி ஈராக்சைடு அளவு அதிகமாவதால், குருதி முச்சு நிறமியின் உயிர்வளி நாட்டம் குறையும் இயற்கை நிகழ்ச்சி. இதனால் வணி மாற்றம் நடைபெற ஏதுவாகிறது. (உயி)

Bohr theory - போர் கொள்கை: அணு நீர் வளியின் நிறமாலையை விளக்க நீல்ஸ் போர் (1855-1962) 1911இல் அறிமுகப் படுத்தி, 1913இல் வெளியிட்ட கொள்கை. (இய)

boiling - கொதித்தல்: வெப்பநிலை மாறாமல் ஒரு நீர்மம் ஆவி அல்லது வளிநிலைக்கு மாறுதல். (இய)

boils - கொப்புளங்கள்: மயிர்களைச் சுற்றி கடுமையாக ஏற்படும் அழற்சி. ஸ்டேப்பிலோ காக்கஸ் அரியஸ் என்னும் நுண்ணுயிரியால் ஏற்படுவது. சீழ் உண்டாகும் வடிவத்திற்குத் திறப்பு இருக்கும். பா. blister. ஒ. carbuncle (உயி)

bond - பிணைப்பு: அணுக்களையும் அணுத்தொகுதிகளையும் இறுக்கிப் பிடிக்கும் விசை. (வேதி)

bond energy - பிணைப்பாற்றல்: குறிப்பிட்ட பொருளில் குறிப்பிட்ட கட்டைப் பிரிக்கப் பயன்படும் ஆற்றல். (வேதி)

bond length - பிணைப்பு நீளம்: வேதிக்கட்டில் சேர்க்கப்படும் இரு அணுக்களின் கருக்களுக்கிடையே உள்ள தொலைவு. (வேதி)

bond polarity - பிணைப்பு முனைத் திறன்: மின்னணுக்களை ஈர்க்க, வேதிப்பிணைப்பிலுள்ள இரு அணுக்களின் திறனிலுள்ள வேறுபாடு. (வேதி)

bone - எலும்பு: எல்லா உயர் விலங்குகளின் எலும்புக் கூட்டைத் தோற்றுவிக்கும் கடினத் திசு, கொல்லேஜேன் இழைகள், எலும்பு உப்புகள் (கால்சியம் மற்றும் பாஸ்பேட்) ஆகியவற்