பக்கம்:அறிவியல் அகராதி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Bou

58

bre


Bourdon gauge - போர்டன் அளவி: நீராவி அழுத்தத்தை அளக்கும் கருவி. நீராவி எந்திரத்தில் பயன்படுவது. (இய)

Boyle's law - பாயில் விதி: மாறாவெப்ப நிலையில், குறிப்பிட்ட அளவு பொருண்மையுள்ள வளியின் பருமனும் அதைத்தாக்கும் அழுத்தமும் ஒன்றுக்கொன்று எதிர்வீதத்தில் இருக்கும். PV என்பது மாறா எண். P- அழுத்தம் V- பருமன். (இய)

bract - பூவடிச்சிதல்: மாறிய இலை. தன் கோணத்தில் பூவைத் தாங்குவது. பூ அல்லது பூக்கொத்திற்குக் கீழ் வளர்வது. (உயி)

bracteole - பூக்காம்புச் செதில்: பூக்காம்பிலுள்ள சிறிய இலை. (உயி)

brain - மூளை: கரு நிலைப் புறப்படையிலிருந்து உண்டாகும் மைய நரம்பு மண்டலத்தின் முன் பகுதி. இருபக்கச் சமச்சீருள்ள எல்லா விலங்குகளிலும் உண்டு. பெருமூளை, இடைப்படுமூளை, சிறுமூளை, முகுளம் முதலிய பகுதிகளைக் கொண்டது. உடற் செயல்களைக் கட்டுப்படுத்துவது. ஒருமுகப் படுத்துவது. மண்டை ஒட்டில் பாதுகாப்பாக அமைத்திருப்பது. (உயி)

brain death - மூளைச்சாக்காடு: மூளையின் உயிர்ப்பான செயல்கள் நிலையாக ஒடுங்குதல், இந்நிலையிலேயே உறுப்பு மாற்றத்திற்குரிய உறுப்புகள் நீக்கப்படும். (உயி)

brake - தடுப்பி: தடுப்புக்கட்டை. பேருந்து முதலிய தானியங்கிகளின் இயக்கத்தை நிறுத்தும் கருவி அமைப்பு. காற்றுத்தடுப்பி, நீரியல் தடுப்பி, வெற்றிடத்தடுப்பி என இது மூவகைப்படும். மிதிவண்டியில் எந்திரத் தடுப்பி உள்ளது. (இய)

branching - தாவரக்கிளைப்பு: இது இரு வகைப்படும். 1. ஒருகால் கிளைப்பு (மனோபோடியல் பிரான்ச்சிங்) - சவுக்கு. 2 கோண மொட்டுக்கிளைப்பு (சிம்போடியல் பிரான்ச்சிங்) - ஆல். (உயி)

brass - பித்தளை: 3 பங்கு செம்பும் 1 பங்கு துத்தநாகமும் சேர்ந்த உலோகக் கலவை. சமையல் பாண்டங்கள், நாணயங்கள், சிலைகள் செய்யப் பயன்படுவது. (வேதி)

breakdown - 1. முறிவு: ஒரு காப்புப்பொருள் வழியாக மின்னோட்டம் சட்டென்று செல்லுதல். இம்முறிவு ஏற்படும் அழுத்தம் மின்னழுத்தமாகும். 2. பழுது: ஒரு கருவியமைப்பு செயல்படுவது நிற்றல். எ-டு. பேருந்து எண்ணெய்க் கோளாறு காரணமாக வழியில் ஓடாது நிற்றல். (இய)

breathing - மூச்சு: பா. respiration. (உயி)

breeder reactor - உற்பத்தி அணு உலை: அணுக்கரு உலை. இது பிளவுப் பொருட்கைளப் பயன்படுத்துவது மட்டுமல்லாமல் பிளவுபடாப் பொருள்களையும் பிளவுப் பொருள்களாக