பக்கம்:அறிவியல் அகராதி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

bro

60

bud


களின் தொடரும் தாக்குதலினால்தான் இவ்வியக்கம் நடைபெறுவது. கூழ்மச் சிதறுதொகுதிகளைப் பொறுத்தவரை இஃது அடிப்படைச்சிறப்பு வாய்ந்தது. (உயி)

brown ring test - பழுப்பு வளையச் சிற்றாய்வு: நைட்ரிக் காடியைக் கண்டறியும் ஆய்வு. பெரஸ் சல்பேட்டுக் கரைசலில் சிறிது அடர் கந்தகக் காடியைச் சேர்க்க. பின் இக் கலவையில் சிறிது அடர் நைட்ரிக் காடியையும் சேர்க்க. நீர்மட்டத்தில் பழுப்பு வளையம் ஏற்படும். (வேதி)

bruises - கன்றிப்புகள்: ஊமைக் காயங்கள். தோல் சிதையாமல் அதற்கடியிலுள்ள திசுக்களில் குருதி வெளிப்படுவதால் தோலின் நிறம் மாறுதல். (உயி)

brush - தூரிகை: 1. வண்ணக் குழைவு அடிக்கப் பயன்படும் கருவி. 2. நகரும் பகுதியோடுள்ள மின் தொடர்பு. மின் உந்தி (மோட்டார்) அல்லது பிறப்பியில் (ஜெனரேட்டர்) இருப்பது. (இய)

brush discharge - தூரிகை மின்னிறக்கம்: அதிக மின்னழுத்தமுள்ள கூரிய முனைகளுக்கருகில் தோன்றும் ஒளிர்வான வளிமின்னிறக்கம். (இய)

bryophyta - மாசித் தாவரங்கள்: பூவாத்தாவரங்கள். இவற்றுக்கு இலை, தண்டு, என்னும் உறுப்பு வேறுபாடு இராது. உண்மையான வேர்கள் இல்லை. சிதல்கள் பைகளில் உண்டாகும். இவற்றின் வாழ்க்கை வரலாற்றில் தலைமுறை மாற்றம் உண்டு. எ-டு. மாசிகள், கல்லீரல் தட்டுகள். (உயி)

buccal cavity - வாய்க்குழி: வாய்க்கடுத்துள்ளது. உணவு இதன் மூலம் உணவு வழிக்குச் செல்வது. (உயி)

Buchner funnel - புக்கனர் புனல்: புக்கனர் வைத்தூற்றி, உறிஞ்சுதல் மூலம் வடிக்கட்டப் பயன்படும் பீங்கானாலான புனல். (வேதி)

buckminster fullerine - பக்மினிஸ்டர் புல்லரின்: கரியின் மூன்றாம் வேற்றுரு. அமெரிக்கப் புனைவாளர் பக்மிளிஸ்டர் புல்லர் அமைத்தது. இம்முலக்கூறு 60 கரியணுக்களாலானது. புகைபோக்கிக் கரியின் ஒரு பகுதியாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அதிக அமைப்பு நிலைப்புத் திறன் கொண்டது. (வேதி)

bud - அரும்பு: மொட்டு. பாலில்லா முறையில் ஒரு புதிய உயிராக வளரும் தாவர நீட்சி. இதில் கணுவிடைகள் நீளாதிருக்கும். இது உறுப்பரும்பாக இருந்தால் இலையாகவும், பூவரும்பாக இருந்தால் பூவாகவும் மாறும். (உயி)

budding - அரும்புதல்: மொட்டு விடுதல். பாலில்லா இனப்பெருக்க முறைகளில் ஒன்று. பா. vegetative reproduction. (உயி)

bud graft - அரும்பொட்டு: உறுப்பு இனப்பெருக்கம். கலவி இல்லை. இதில் திட்டமிட்டபடி ஓர்