பக்கம்:அறிவியல் அகராதி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cad

63

cal


cadmium cell - கேட்மியம் மின்கலம்: பா. weston cell (இய)

caducous - உதிரும்; உதிரக்கூடிய பூப்பகுதிகள். (உயி)

caecum - குடல்பை: முட்டுபை, உணவு வழியில் பெருங்குடலும் பின் சிறுகுடலும் சேருமிடத்திலுள்ள ஒரு வழிப்பை. குடல் வாலில் முடிவது. இப்பையில் கூட்டு வாழ்விகள் தங்கி நொதிகளை உண்டாக்குபவை. இந்நொதிகள் செல்லுலோசைச் செரிக்கவைப்பவை. பா.alimentary canal. (உயி)

caesium - சீசியம்: Cs, இயற்பண்புகளிலும் வேதிப்பண்புகளிலும் சோடியத்தை ஒத்தது. மென்மையானதும் வெண்மையானதுமான உலோகம், வானொலிக் குழாய்களும், ஒளிமின்கலமும் செய்யப் பயன்படுவது. (வேதி)

caesium clock - சீசியக் கடிகாரம்: ஆற்றல் வேறுபாட்டு அடிப்படையில் வேலை செய்யும் அணுக்கடிகாரம். (சீசியம் 133). (இய)

caffeine - கேஃபின்: C8H10N4O2 காப்பி அவரையிலும் தேயிலைகளிலும் உள்ள பியூரின், பட்டுப் போன்ற வெண்ணிறப் பொருள். செயற்கையாகப் பெறலாம். இதயச்செயலை ஊக்குவிப்பது. பல மருந்துகளில் பயன்படுவது. (வேதி)

cainozoic, cenozoic - புத்தூழி: புவி வளரியில் காலம். 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னுள்ள பாலூட்டிகள் காலம். (உயி)

calamine - காலமின்: ZnCO3. துத்தநாகக் கனிமம். தோல் மருந்துகள் செய்யப்பயன்படுவது. வெயிலினால் முகங்கருத்தலுக்கு இதன் கரைசல் மருந்து. (வேதி)

calcarea - சுதைய முட்கூட்டுலிகள்: துளை தாங்கிகள். (பொரி பெரா) தொகுதியைச் சார்ந்த வகுப்பு. இவை கடற்பஞ்சுகள். அனைத்தும் கடல் வாழ்பவை. சுதைய முட்களைக் கொண்டுள்ளதால் இப்பெயர். (உயி)

calcicole - காரநிலத் தாவரங்கள் : சுண்ணாம்பு ஊட்டமுள்ள நிலங்களில் வாழ்பவை. (உயி)

Calciferol - கால்சிபெரால்: வைட்டமின். டி (உயி)

calciferous glands - சுதையச் சுரப்பிகள்: சில வகை மண்புழுக்களில் தொண்டைப் பகுதியிலுள்ள கழிவுச்சுரப்பிகள். (உயி)

calcifuge - களிமண்நிலத் தாவரங்கள்: சுண்ணாம்பு ஊட்டமில்லா நிலங்களில் வாழ்பவை. (உயி)

calcination - சுதையமாக்கல்: நீற்றுதல், வெப்பப்படுத்தும் முறை. இதில் தாது வெப்பப்படுத்தப் படுதல். இதனால் அதன் அய்டிரேட்டுகள் அல்