பக்கம்:அறிவியல் அகராதி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cha

79

che


நேர்மின்னேற்றம் (+), எதிர்மின்னேற்றம் (-) என இருவகைப்படும். ஒத்த மின்னேற்றங்கள் ஒன்றை மற்றொன்று விலக்கும். எதிர்மின்னேற்றங்கள் ஈர்க்கும். அலகு கூலூம். (இய)

charge density - மின்னேற்ற அடர்த்தி: ஒரு பருப்பொருளின் அலகுப் பருமனிலும் அலகுப் பரப்பிலும் உள்ள மின்னேற்றம். இது மூவகைப்படும். 1. பரும மின்னேற்ற அடர்த்தி: ஒரு கனமீட்டருக்கு இத்தனை கூலூம்கள் என அளக்கப்படுவது. 2. மேற்பரப்பு மின்னேற்ற அடர்த்தி: ஒரு சதுர மீட்டருக்கு இத்தனை கூலூம்கள் என அளக்கப்படுவது. 3. நீள் மின்னேற்ற அடர்த்தி: அலகு கூலூம்/மீ (இய)

Charles' law - சார்லஸ் விதி: மாறா அழுத்தத்தில், குறிப்பிட்ட பொருண்மையுள்ள வளியின் பருமன், 0° செ. வெப்ப நிலையில், ஒவ்வொரு செல்சியஸ் பாகைக்கும் அதன் வெப்பநிலை உயர்த்தப்படும்பொழுது, அதன் பருமன் மாறாப் பின்ன அளவில் பெருகுகிறது. ஒரு குறிப்பிட்ட குறிக்கோள் வளிக்கு அப்பின்னம் 1/273. இதை ஒரு சமன்பாடாக அமைக்கலாம்.

V = V°(1+t/273)
V° - 0° செ.இல்பருமன்.
v-t° செ இல் பருமன்.

chassis - சட்டகம்: கருவி அமைப்புத் தொகுதி ஓர் உந்து வண்டியில் சக்கரம், எந்திரம் முதலியவற்றைக் கொண்ட தொகுதி. வானொலி, தொலைக் காட்சி ஆகியவற்றின் அமைப்புத் தொகுதி வானுர்தியின் இறங்கு வண்டி. துப்பாக்கி வண்டி. (தொ.நு)

cheddie - செடைட்: உயர் வெடி பொருள்களில் ஒன்று. சோடியம் அல்லது பொட்டாசியம் குளோரேட் கலந்த நைட்ரோ சேர்மங்களிலிருந்து செய்யப்படுவது. (வேதி)

chelate - இடுக்கிணைப்பு: உலோக ஒருங்கிணை அசைவு. கொடுக் கிணைப்பு என்றும் கூறலாம். (வேதி)

chemical affinity - வேதி நாட்டம்: ஒரணு மற்றொரு அணுவோடு சேரும் போக்கு. வேதிச் செயலுக்கு இன்றியமையாதது. (வேதி)

chemical bond - வேதிப் பிணைப்பு: ஒரு மூலக்கூறிலுள்ள அணுக்களை நெருக்கிவைக்கும் விசை. ஐந்து பிணைப்புகள் வரை உருவாக்கலாம் ஒற்றைப் பிணைப்பு H + Cl H → Cl

நாற்பிணைப்பு

H
|
Cl - C - O - H
|
H