பக்கம்:அறிவியல் அகராதி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

chl

82

cho


ஒரு கண்ணறையுள்ள உயிரி. கிண்ண வடிவமுள்ள பசுங்கணிகம் உள்ளதால், தன் உணவைத் தானே உருவாக்கிக் கொள்வது. கண்ணறையின் முன்முனையில் நீரில் நீந்த இரு குற்றிழைகள் இருக்கும். மற்றும் கண்ணறைக் கணிகத்தில் உட்கருவும் குமிழிகளும் இருக்கும். முதன்மையாகக் கலவியிலா இனப்பெருக்கமும் அடுத்துக் கலவி இனப் பெருக்கமும் நடைபெறும். (உயி)

chlorate - குளோரேட்: குளோரிகக் காடி உப்பு. (வேதி)

chloride - குளோரைடு: ஏலைடு உப்பின் ஒரு வகை. (வேதி)

chlorination - குளோரினாக்கல்: குளோரினை நீருடன் சேர்த்து, அதிலுள்ள நோய் நுண்ணங்களைக் கொல்லுதல். பொன்னை அதன் தாதுவிலிருந்து குளோரின் கொண்டு பிரிக்கலாம். (வேதி)

chlorine - குளோரின்: பசுமஞ்சள் நிறமுள்ள வளி, மூச்சுத்திணறும் மணம். வெளுக்கவும், நோய் நுண்ண நீக்கியாகவும் பயன்படுவது. (வேதி)

chlorine dioxide - குளோரின் ஈராக்சைடு: மாவை வெளுக்கவும் நீரைத் தூய்மையாக்கவும் பயன்படுவது. (வேதி)

வார்ப்புரு:Schlorite - குளோரைட்: குளோரசக் காடி உப்பு. (வேதி)

chloroform - குளோரபாம்: CHCl3 முக்குளோரோ மீத்தேன். நிறமற்ற நீர்மம். சலவைத்தூளுடன் எத்தனால் அல்லது அசெட்டோனைச் சேர்த்து வெப்பப்படுத்தக் கிடைக்கும் மயக்க மருந்து. (வேதி)

chlorophyll - பச்சையம் தாவர உறுப்புகளிலுள்ள பசும்பொருள். ஒளிச்சேர்க்கைக்கு இன்றியமையாதது. இதனால் தாவரம் தன்னூட்ட வாழ்வியாக அமையமுடிகிறது. பச்சையமுள்ள அணு பசுங்கணிகம். (உயி)

chloroplast - பசுங்கணிகம்:தாவர உயிரணுக்களில் உள்ளது. ஒளிச் சேர்க்கைக்கு இன்றியமையாதது. (உயி)

chlorosis - (குளோரோசிஸ்) - 1. பச்சையச் சோகை: இரும்பு ஊட்டம் குறைவதால், தாவரப் பசும் பகுதிகள் வெளுக்கும். 2. பச்சை நோய்: இளம்பெண்களிடம் காணப்படும் ஒரு வகைக் குருதிச் சோகை. (உயி)

choke - மின்கட்டுப்படுத்தி: மின்மறுப்பு என்பது ஒருவகை மின்எதிர்ப்பு. குழாய் மின்விளக்குச் சட்டத்தில் ஒரு சிறிய நீள் சதுர உலோகப்பெட்டி பொருத்தப் பட்டிருக்கும்.

choking - மூச்சடைப்பு: புகை, நெடி முதலியவற்றால் மூச்சில் தடை ஏற்படுதல். (உயிர்)

cholesterol - கொலாஸ்டிரால்: C27H45OH. வார்ப்புரு:S C27H46O. கொழுப்பிலிருந்து