பக்கம்:அறிவியல் அகராதி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cin

85

cir


cineole - சினியோல்: C10 H18O. காரமணமுள்ளது. நிறமற்ற எண்ணெய் போன்ற டெர்பின் மருத்துகளிலும், நறுமணப் பொருள்களிலும் பயன்படுவது. (உயி)

cingulum - வளையம்: தண்டுக்கும் வேருக்கும் இடையிலுள்ள தாவரப்பகுதி. (உயி)

cinnabar - இங்குலிகம்: இயற்கைப் பாதரசச் சல்பைடு. ஒளிர்வான செந்நிறப் படிகம். பாதரசத்தின் முதன்மையான தாது. (வேதி)

circadian rhythm - பகற் பொழுது ஒழுங்கு: பகற் பொழுது தாளமுறை. தாவரங்களிலும் விலங்குகளிலுமுள்ள பல் வளர்சிதை மாற்றச் செயல்களான பகற்கால ஒழுங்கு. மனிதன் 40 பகற்கால ஒழுங்குகளைக் கொண்டவன். (உயி)

circinate vernation - இலைச் சுருளமைவு: இளமையாக இருக்கும்பொழுது, இதில் முழுக்கூட்டிலையும் கடிகாரச் சுருள் போன்று வளைந்திருக்கும். இலைகளை மாநிற மயிர்கள் முடியிருக்கும். எ-டு. பெரணி. (உயி)

circuit - மின்சுற்று: ஒரு மின் கலத்தின் மின்னோட்ட வழி. இது இரு வகைப்படும். 1. மூடிய சுற்று: கலத்தின் இரு முனைகளும் கம்பியால் இணைக்கப்பட்டிருக்கம். விளக்கு எரியும். 2. திறந்த சுற்று: கலத்தின் இரு முனைகளும் கம்பியால் இணைக்கப்படாமல் இருத்தல். விளக்கு எரியாமல் இருத்தல். இச்சுற்றை மூடித் திறப்பதற்கான உரிய அமைப்புகளாவன. தொடு சாவிகள், குமிழ்கள், பொத்தான்கள். ஒ. short circuit. (இய)

circular motion - வட்ட இயக்கம்: வளைவழி ஒன்றில் செல்லும் துகளின் இயக்கம். மைய நோக்குவிசை, மைய விலக்குவிசை இவ்வியக்கத்தைச் சார்ந்தவை. (இய)

circulatory system - சுழல் மண்டலம்: குருதிக் குழாய் மண்டலம், இதயமும் குருதிக் குழாய்களும் கொண்டது. குருதி மூலம் உணவுப் பொருள்கள் உடலின் பல பகுதிகளுக்கும் செல்ல உதவுவது. (உயி)

circumnutation - (சர்கம்நியூட்டேஷன்) சுற்றியக்கம்: தாவர வளர்ச்சிப் புள்ளியில் உண்டாகும் இயக்கம். (உயி)

cirrhosis - இறுகுநோய்: ஒர் உறுப்பின் நோய் நிலை. எ-டு. கல்லீரலுக்குரிய பொருள் நீங்கி. அதற்குப் பதில் நார்த்திசு உண்டாதல். ஆகவே, அடிவயிறு பருத்துக் காணப்படும். பா. ascites (மரு)

cirrus - பற்றுக்கம்பி: 1. நலிந்த தண்டுடைய தாவரங்களில் காணப்படுவது: பிரண்டை 2. சுருளிழை சிறிய சுருண்ட நார் (உயி) 3. சுருள் முகில்: முகில்களின் மிக உயர்ந்த வடிவம். (இய)