பக்கம்:அறிவியல் அகராதி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

com

96

con


முதலில் தோன்றிய பிம்பத்தைப் பெரிதாக்குவது. எ-டு. தொலைநோக்கி, துண்ணோக்கி. (உயி)

compounder - மருந்து கலப்பாளர்: மருத்துவமனையில் நோயாளிகளுக்கு மருந்துகளை உரிய முறையில் கலந்து கொடுப்பவர். ஒ. pharmacist. (மரு)

compression - துகள்நெருக்கம்: ஒலிஅலையில் குறிப்பிட்ட பகுதிகளில் இம்மிகள் மிக நெருக்கமாகவுள்ள இடத்திற்குத் துகள்நெருக்கம் என்று பெயர். (இய)

Compton effect - காம்ப்டன் விளைவு: தடையில்லா மின்னணுக்களால் எக்ஸ் கதிர்கள் அல்லது காமா கதிர் ஒளியன்கள் சிதறும்பொழுது, அவற்றின் ஆற்றலில் ஏற்படும் குறைவு அல்லது ஒடுக்கம்.

computer - கணிப்பொறி: கணினி. இது ஒரு மின்னணுக் கருவியமைப்பு. கட்டளைக் கேற்பச் செய்திகளை முறையாக்குவது. இதற்கு நிகழ்நிரல் (புரோகிராம்) என்று பெயர். பொதுவாக இது நுண்கணிப்பொறி, பெருங்கணிப்பொறி என இரு வகைப்படும். ஏனைய வகைகள். 1. எண்ணிலக்கக் கணிப்பொறி 2. ஒப்புமைக் கணிப்பொறி 3. கலப்பினக் கணிப்பொறி. இவற்றில் நடைமுறையில் நன்கு செயல்படுவது எண்ணிலக்கக் கணிப்பொறியே. இதில் உட்பாடு (இன்புட்) எண்களாகவும் எழுத்துக்களாகவும் ஈரெண்குறியீடாகக் குறிக்கப்பெறும் (0,1)

ஒரு கணிப்பொறியின் மூன்று முக்கியப் பகுதிகளாவன: 1. உட்பாட்டு வெளிப்பாட்டுக் கருவிகள். 2. நினைவகம். 3. மையச்செயல்முறையாக்கி அல்லது மையச் செயலகம்.

கணிப்பொறியில் கருவியம் (ஹார்டுவேர்) என்பது கருவித்தொகுதிகள் அடங்கியது. மென்னியம் (சாப்ட்வேர்) என்பது நிகழ்நிரல்களையும் தகவல்களையும் கொண்டது. விரைவு, நுண்மை, நம்புமை, மாற்றுதல் ஆகியவை இதன் சீரிய சிறப்பியல்புகள். (இய)

computer business - கணிப்பொறித் தொழில்.

computer communication - கணிப்பொறிச் செய்தித் தொடர்பு.

computer education - கணிப்பொறிக் கல்வி.

computer memory - கணிப்பொறி நினைவகம்.

concave lens - குழிவில்லை: ஒரங்களில் தடித்தும் நடுவில் மெலிந்தும் இருக்கும் வில்லையின் இரு வகைகளுள் ஒன்று. பொதுவாகக் குவிவில்லைத் தொடர்பாகப் பயன்படும் கலைச்சொற்கள்.

1. குவியத் தொலைவு: வில்லையின் மையப்புள்ளிக்கும் முக்கிய குவியத்திற்கும் இடையிலுள்ள தொலைவு.