பக்கம்:அறிவியல் அகராதி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

con

96

con


2. முக்கிய அச்சு (பிரின்சிபல் ஆக்சிஸ்): வில்லையின் வளைவு மையங்களைச் சேர்க்கும் நேர்க்கோடு.

3. முக்கிய குவியம் (பிரின்சிபல் போகஸ்): முக்கிய அச்சுக்கு இணையாக வரும் ஒளிக்கதிர்கள் வில்லையில்பட்டு, விலகலடைந்து மறுபக்கத்தில் அவை குவியும் புள்ளி.

4. ஒளிமையம் (ஆப்டிக் சென்டர்): முக்கிய அச்சும் வில்லையின் அச்சும் சேருமிடம். குழிவில்லையில் எப்பொழுதும் மாயபிம்பம் உண்டாகும். இது தொலைநோக்கியிலும் முக்குக்கண்ணாடியிலும் பயன்படுவது. (இய)

concave mirror - குழியாடி: கோள ஆடியின் ஒருவகை. மறிக்கும் பரப்பு குழிந்திருக்கும். இதனோடு தொடர்புடைய கலைச்சொற்களாவன: 1. வளைவு மையம் (சென்டர் ஆஃப் கர்வேச்சர்): ஆடியின் கோளத்தின் மையம். 2. குவியத் தொலைவு (போகஸ் லெங்த்): ஆடிமையத்திற்கும் முக்கிய குவியத்திற்கும் இடையிலுள்ள தொலைவு. இது வளைவு ஆரத்தில் பாதி. 3. ஆடிமையம் (போல் ஆஃப் மிரர்): கோள ஆடியின் மறிக்கும் பரப்பின் மையம். 4. முக்கிய குவியம் (பிரின்சிபல் போகஸ்): முக்கிய அச்சுக்கு இணையாக வரும் ஒளிக்கதிர்கள் ஆடியில் பட்டு மறிக்கப்பட்டு, அவை எல்லாம் குவியும் புள்ளி. 5. முக்கிய அச்சு (பிரின்சிபல் ஆக்சிஸ்): ஆடிமையத்தையும் வளைவு மையத்தையும் சேர்க்கும் நேர்க்கோடு. 6. வளைவு ஆரம் (ரேடியஸ் ஆஃப்கர்வேச்சர்): வளைவு மையத்திற்கும் ஆடிமையத்திற்கும் இடையிலுள்ள தொலைவு. (இய)

concentrated - அடர்மிகு: அடர் கந்தகக் காடி, நீர் சேராதது. ஒ. dilute. (வேதி)

concentration - அடர்ப்பித்தல்: செறிவு மிகுத்தல். துத்தநாகத்தை அதன் தாதுக்களிலிருந்து பிரித்தெடுக்கப்படும் முறைகளுள் ஒன்று. நன்கு பொடி செய்த துத்தநாகத் தாது. எண்ணெய் கலந்த நீரில் சேர்க்கப்பட்டு நீரின் வழியாகக் காற்று செலுத்தப் படுகிறது. மண் துகள்கள் நீரில் நனைந்து அடியில் தங்குகின்றன. தாதுக்கள் எண்ணெய் சேர்ந்த நீர் நுரையுடன் கலந்து, மேற்பரப்பில் மிதக்கின்றன. பின்னர், இவை தனித்து வழித்தெடுக்கப்படு கின்றன. இவ்வாறு மண் போன்ற பொருள்களை நீக்கித் தாதுவைச் செறிவு படுத்தும் முறைக்கு நுரைமதிப்பு முறை (பிராத் புளோட்டேஷன் மெத்தேடு) என்று பெயர். 2. அடர்வு: செறிவு ஒரு கரைசலின் ஓரலகு பருமனின் பொருள் அளவு. அலகு மோல். (வேதி)