பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Pulumbago: காரீயம்: எழுதுகோலுக்காகப் பயன்படுத்தப்படும் ஈயத்தைப் போன்ற கரிவகை. இது மேற்பரப்புகளில் எளிதில் கடத்தாப் பொருளாகப் பூச்சு வேலைக்கும் பயன்படுகிறது.

Plumb and level: (க.க.) தூக்கு நூற்குண்டு: துல்லியமான கிடை மட்டத்தையும், துல்லியமான செங் குத்தையும் அறிவதற்காகப் பயன்படும் உலோக அல்லது மர நூற் குண்டு.

Plumb bob: (க.க.) ஈயக் குண்டு; கட்டிட வேலையில் பயன்படும் தூக்கு நூற்குண்டின் நுனியில் உள்ள ஈயக்குண்டு.

Plumbing: குழாய் வேலை: ஈயக் குழாய் முதலியவற்றைப் பொருத்துதல். பழுது பார்த்தல் போன்ற வேலை

Plummet: தூக்கு நூல்: செங்குத்து ஆழம் பார்ப்பதற்கான கருவியின் தூக்கு நூற்குண்டு,

Ply: படலம்: பல அடுக்குகளாக உருவாக்கிய திண்மையின் ஒரு படலம். இத்திண்மையின் ஒவ்வொரு அடையும் ஒரு படலம் ஆகும்.

Plywood: (மர.வே.) ஒட்டுப் பலகை: படலங்களின் இழைவரை ஒன்றற்கொன்று குறுக்க வைத்து ஒட்டிச் செய்யப்படும் மெல்லிய வன் பலகை

Pneolator: (எந்.) செயற்கைச் சுவாசக் கருவி: இடம்விட்டு இடம்

Pne

479

Poi


கொண்டு செல்லக்கூடிய தானாக இயங்கும் செயற்கைச் சுவாசக் கருவி.

Pneumatic : (பொறி.) காற்றுப் பட்டை : காற்றடைத்த குழாய்ப் பட்டை.

Pneumatic brakes (தானி.) காற்றுத் தடை : காற்று அழுத்தம் அல்லது வெற்றிடம் மூலம் இயக்கப்படும் தடை.

Pneumatic dispatch : காற்றழுத்த இயக்க முறை : காற்றழுத்தத்தினால் அல்லது காற்று வெளியேற்றத்தினால் இயக்கப்பட்டுக் குழாய்கள் வழியாகச் சிப்பங்கள் முதலியவற்றை இடம் பெயர்த்துக் கொண்டு செல்லும் முறை.

Pneumatic tire (தானி.) காற்றுக்குழாய்ப் பட்டை : காற்றடைத்த குழாய்ப் பட்டை.

Pneumatic tools: (பொறி.)காற்றழுத்தக் கருவி : காற்றழுத்தத்தின் மூலம் இயக்கப்படும் சாதனம்.

Pneumatic trough : வளிக் கொள்கலம் : நீர் அல்லது பாதரசப் பரப்பின் மேல் ஜாடிகளில் காற்றினைத திரட்டுவதற்கான கலம்.

Point : (அச்சு.) அச்செழுத்துரு அலகு : அச்செழுத்துருவின் ஒர் அலகு. ஓர் அலகு=.031837 அங்.

Pointing: (க.க.) இணைப்புக் காரைப்பூச்சு: கட்டுமான த்தில்