பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Potential difference : (மின்.) மின்னழுத்த நிலை வேறுபாடு : நிகழக்கூடும் மின்னோட்டத்தின் ஏற்றத்தாழ்வு உச்ச நிலைகளின் வேறுபாடு. இது ஒல்ட் அலகுகளில் அளவிடப்படுகிறது.

Potential energy : (இயற்.) உள்நிலை ஆற்றல் : உள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் ஆற்றல்.

Potentiometer : (மின்.) மின்னழுத்த ஆற்றல் மானி : மின்னழுத்த நிலைகளை ஒரு தரளவுடன் ஒப்பிட்டு அளவிடுவதற்குப் பயன்படும் ஒரு கருவி.

Potters wheel i வேட்கோத்திகிரி : குயவர்கள் களிமண்ணுக்கு உருக்கொடுக்கப் பயன்படுத்தும் சக்கரம்.

Pottery : மட்பாண்டத் தொழில்: சட்டி பானை செய்யும் மட்பாண் டத்தொழில் அல்லது களிமண் பாண்டத் தொழில்.

Pound : பவுண்ட் : 12 அவுன்ஸ் கொண்ட எடை அலகு.

Power ; (மின்.) மின்விசை : மின்விசையின் அலகு வாட், மின் விசையினால் இயக்கத்தின் போது செய்யப்படும் வேலையின் விகிதத்தைக் கொண்டு இது அளவிடப்படுகிறது. எந்திரவியலில் விசை: இயக்குந்திறம் X தொலைவு காலம்



Pow

488

Pow


Power amplifier: திறன்மிகைப்பி: ஒலிபெருக்கிக்குப் பெருமளவு விசையை அளிக்கப் பயன்படுத்தப்படும் ஒருவகை மின் கருவி.

Power brakes: (தானி:எந்..) விசைத்தடை: மின்னியக்கச் செறிவு முறைமூலம் நீரியல் முறையில் இயக்கப்படும் தடை.

Power factor (மின்.) திறன்கூறு:உண்மைத் திறனுக்கும் தோற்றத் திறனுக்குமிடையிலான விகிதம்.

திறன் கூறு = உண்மைத்திறன் (W) தோற்றத்திறன் (VxA)

Power feed: (எந்.) விசையூட்டம்; கடைசல் எந்திரம், திருகிழை வெட்டுங்கருவி போன்ற எந்திரங்களுக்குத் தானியக்கமுறையில் உட் செலுத்துதல்.

Power hammer: விசைச்சம்மட்டி: காற்று, நீர் , எந்திரவிசை மூலம் இயக்கப்படும் சம்மட்டி. கரைசல் பணிகளில் பயன்படுத்தப்படுகிறது.

Power landing: (வானூ.) விசை இறக்கம்: விமான எஞ்சினின் நீரா விப் புழையின் வாயடைக்கப் பெற்று மெல்ல இயங்குமாறு செய்து விமானத்தைத் தரை இறங்கச் செய்தல்.

Power pack: (மின்.) திறன் அடைப்பு: வானொலிப் பெட்டி,பொது ஒலிபெருக்கி அமைப்பு முதலியவற்றுக்குத் தேவையான மின்