பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Preforming: (குழை.) முன்னுருவாக்கம்: பிளாஸ்டிக் தொழிலில் வார்ப்படங்களை விரைவாகவும் மிகக் குறைந்த சேதாரத்துடன் உருவாக்கும் வகையில் வார்ப்படப் பொருட்களை செறிவுடையதாக் கும் முறை.

Preignition ı (தானி.) முன்னிடு வெடிப்பு: உள்வெப்பாலை எரி பொருளின் உரிய நேரததிற்கு முற்பட்ட வெடிப்பு. சூடான கார்பன் படிவுகளாலோ, தவறான எரியூட்டத்தினாலோ இது நிகழலாம்.

Pressed steel:(உலோ.வே.)வடிவமைப்பு எஃகு: எஃகுத் தகடுகள் அல்லது படிவங்கள் மூலம் அழுத்தங் கொடுத்துப் பளபளப்பாக வடி வமைத்த பல்வேறு பொருட்கள் உருவாக்கப்படுகின்றன. இவை வடிவமைத்த எஃகு எனப்படும்.

Press room: (அச்சு.) அச்சடிப்பு அறை: அச்சடிக்கும் பணி நடை பெறும் அறை.

Pressure: (மின்.) மின்வலி இயலாற்றல் வேறுபாடு: மின்னியக்க விசை. இது பொதுவாக மின்னழுத்தம் எனக் கூறப்படும்.

இயற்பியலில் ஒர் அலகு பரப்பளவில் விசையழுத்தம்,

Pressure airship: (வானூ.) அழுத்த விண்கலம்: முழுமையாகவோ பகுதியாகவோ உள்ளழுத்தம் மூலம் தனது வடிவத்தைப் பேணிக் கொள்ளும் விண்கலம்.

Pressure altitude: (வானூ.)

Pre

485

Pri


அழுத்த உயரம்: ஒரு தரநிலைப் படுத்திய வாயு மண்டலத்தில் ஒரு குறிப்பிட்ட அழுத்த நிலைக்கு நேரிணையான உயரம்.

ஒரு விண்கலத்தில் வாயுப்பைகள் முழுமையாக நிரம்பியிருக்கக் கூடிய உயரம்.

Pressure cable; அழுத்த வடம்.

Pressure drop: அழுத்த வீழ்ச்சி.

Pressure nozzle: (வானூ.) அழுத்தக் கூம்பலகு: காற்றில் விமானத் தின் வேகத்தை அளவிடுவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு அளவிடு கருவி.

Pressure welding: அழுத்தப் பற்ற வைப்பு: அழுத்தத்தின் மூலம் பற்ற வைப்பு செய்யக்கூடிய பற்றவைப்பு முறை.

Prick punch: (எந்.) ஊசித் துளை: ஒரு சிறிய மையத் துளை. இதனை ‘அமைப்புத் துளை' என்றும் கூறுவர்,

Primary: (மின்.) குறைமின் சுற்று வழி: குறைந்த அழுத்த (6 ஒல்ட்ஸ்) மின் சுற்று வழியைக் குறிக்கிறது.

Primary celi: (மின்.) அடிப்படை மின்கலம்: வேதியியல் ஆற்றலை மின்னியல் ஆற்றலாக மாற்றக் கூடிய மின்கல அடுக்கு. இதில் ஒரு ஜாடியில் மின் பகுப்புக் கரைசலும் இரு மின் வாய்த் தகடுகளும் இருக்கும்.

Primary coil: (மின்.) அடிப்படைச் சுருள்: இந்தச் சுருளில் மூல ஆற்