பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/119

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
493
 

Pyrolusitc : (உலோ.)பைரோலூசைட் : முக்கிய மாங்கனீஸ் தாதுப்பொருள். பல நாடுகளில் இரும்பு போன்ற கரு நிறத்தில் கிடைக்கிறது. இது உலோக மாங்கனீஸ் தயாரிக்கப் பயன்படுவதுடன், மின்கலங்கள், வண்ண உலர்த்திகள் ஆகியவற்றிலும் பயன்படுகிறது.

Pyrometer :(எந்;பொறி.) உயர் வெப்பமானி : உலைகளில் உள்ளது போன்ற மிக உயர்ந்த வெப்ப நிலைகளை அளவிடுவதற்குப் பயன்படும் ஒரு கருவி.

Pyroxylin : (வேதி.) பைரோக்சிலின் : வண்ணநெய், செயற்கைத் தோல் ஆகியவற்றிற்கு வெறியத்தில் தோய்த்துப் பயன்படுத்தப்படும் மரச்சத்து வெடியகிப் பொருள். இது எளிதில் தீப்பற்றக் கூடியது; வெடிக்கத்தக்கது. ஒளிப்படச் சுருள்கள் தயாரிப்பதில் பயன்படுகிறது.

Q

Quad : (அச்சு.) இடஅடைப்பு எழுத்துரு : அச்சுத் துறையில் இட அடைப்புக் கட்டையாகப் பயன்படும் எழுத்துரு. இது அச்சு எழுத்துருவின் உயரத்தைவிடக் குறைவான உயரத்துடன் இருக்கும். இது அச்சுவரி நீளங்களின் மடங்குகளாக வார்க்கப்படும். பத்திகளில் முடிவில் வரிகளிடையே இடைவெளியை அகலமாக்குவதற்கும், ஒர இடம் விடுவதற்கும் இது பயன்படுகிறது.

Ouadrangle : (க.க.) நாற்கட்டரங்கம் : கல்லூரி விளையாட்டுத் திடல் போன்று நாற்புறமும் கட்டிடங்கள் சூழ்ந்த சதுரமான அல்லது நாற்கட்டமான இடப்பரப்பு.

Ouadrant : (1) கால் வட்டம் : செங்கோண ஆரங்களுக்குட்பட்ட வட்டப்பகுதி; வட்டக்காற் சுற்று வரை

(2) கோண மானி : உயரங்களை அளவிடப் பயன்படும் கருவி.

Ouadratic equations : (கணி.) இருவிசைப்படிச் சமன்பாடு : அறியப்படாத ஒர் அளவின் இருமடி வர்க்கத்தை மட்டும் கொண்டுள்ள ஒரு சமன்பாடு, உருக்கணக்கியலில் இரு விசைப் படிமை சார்ந்துள்ள சமன்பாடு.

Ouadrilateral : காற்கரம்:நான்கு பக்கங்களையும் நான்கு கோணங்களையும் உடைய வரை வடிவம்.

Ouadruplane : (வானூ) நாற்சிறகு விமானம் : ஒன்றன் மேல் ஒன்றாக நான்கு தொகுதி சிறகுகளை உடைய ஒரு வகை விமானம்.