பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Raw

502

Rea


Rawhide: பதனிடாத் தோல்: பதனிடப்படாத தோல்.

Rawhide gears: (எந்.) தோல் பல்லிணை: இறுக்கமாக அழுத்தப் பட்ட பதனிடப்படாத தோல் வட்டுகளினாலான ஓசை எழுப்பாத பல்லிணை .

Rawhide hammer: தோல் சுத்தி: பதனிடப்படாத தோல் கொண்டையுடைய கைச்சுத்தி. உலோக உறுப்புகளில் இச்சுத்தியைப் பயன்படுத்தும்போது அந்தஉறுப்புகளில் கறல்கள் ஏற்படாமல் இருக்கும.

Raw material:மூலப் பொருள்: செய்பொருளுக்குரிய மூல இயற்கைப் பொருள்.

Rayon: ரேயான் (மரவிழைப்பட்டு): மரக்கூறினிலிருந்து இயற்றப்படும் செயற்கைப் பட்டு வகை.

Reactance: (மின்.)எதிர்வினைப்பு: ஒரு மாற்று மின்னோட்டச் சுற்று வழியில், மின்னோட்டத்தை எதிர்க்காமல், ஆனால் அதற்கும் அதன் மின்னியக்க விசைக்குமிடையிலான நிலைவேறுபாட்டினை உண்டாக்குகிற தடையின் உறுப்பு.

Reaction: எதிர் வினை: வேதியியலில் புறத்தாக்குதலால் ஏற்படும் இயல் மாறுபாடு.

Reaction coil:எதிர்வினைப்புச்சுருள்.

Reaction voltage:எதிர்வினைப்பு மின்னழுத்தம்.

Reaction engine: (வானூ.) எதிர்வினைப்பு எஞ்சின் (எதிர்வினைப்பு விசைப்பொறி): ஓர் எஞ்சின் அல்லது விசைப்பொறி வெளியேற்றும் பொருளுக்குத் தனது எதிர் வினைப்பு மூலம் உந்துவிசையை உண்டாக்குகிறது. இந்த எஞ்சின் எதிர்வினைப்பு எஞ்சின் எனப்படும்.

Reaction turbine: (வானூ.) எதிர்வினைப்பு விசையாழி: சுழலி அலகுகள் கூம்பலகுகளின் வளையமாக அமைந்த ஒருவகை விசையாழி. இந்த அலகுகளிடையிலிருந்து வெளியேற்றப்படும் திரவத்தின் எதிர்வினைப்பு மூலம் விசையாழி சுழல்கிறது.

Reactor:(மின்.) எதிர்வினைப்பான்: மாற்று மின்னோட்டங்களின் ஓட் டத்திற்கு எதிர்ப்பை அளிக்கும் ஒரு சாதனம். பொதுவாக இரும்பு உள்ளிட்டின் மீதான கம்பிச் சுருள்களைக் கொண்டிருக்கும்.

Reagent (வேதி.) வினையூக்கி: எதிர்த்தாக்காற்றல் மூலம் சேர்மத் தின் பொருட்கூறு கண்டுணர உதவும் பொருள். இது பகுப்பாய்வு வேதியியலில் பயன்படும் பொருள்.

Rear axle: (தானி.) பின் இருசு: பல்லிணைகள், இருசுச் சுழல் தண்டுகள், இயங்குபொறி ஆகியவற்றையும் தாங்கிகள், பட்டை வளையங்கள் போன்ற இயக்கு