பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

517

S

Saddle : சேணம்: (1) மெருகிட்ட மட்பாண்டங்களைச் சுடும் போது அவற்றைத் தாங்கிக் கொள்வதற்குப் பயன்படுத்தப்படும் களி மண்ணினாலான கோல்.

(2) கடைசல் எந்திரத்தின் படுகையில் அமைந்துள்ள ஒரு சறுக்கு ஆதாரம். (3) ஒர் ஆரைத் துரப்பணத்தில் துரப்பணக்கதிரையும், பல்லிணைச் சக்கரங்களையும் கொண்டு செல்லும் சறுக்குத் தகடு.

Saddle - boiler குடுவைக் கொதிகலம் : கருவி கலங்களைச் சூடாக்குவதற்குப் பயன்படும் மேற் கவிவான கொதிகலம்.

Saddle stitch: சேணத் தையல்: ஒரு துண்டு வெளியீட்டின் தாள் களைச் சேர்த்துத் தைப்பதற்கான ஒரு முறை. இதில் நடு மடிப்பில் நூல் அல்லது கம்பி மூலம் தைக்கப்படும். இவ்வாறு தைப்பதன் மூலம் துண்டு வெளியீட்டினைத் தட்டையாகத் திறந்திட முடியும்,

S.A.E. formula : உந்து ஊர்திப் பொறியாளர் கழகச் சூத்திரம் : கேசோலின் எஞ்சின்களின் குதிரை விசைத் திறனைக் கணக்கிடுவதற்கு உந்து ஊர்திப் பொறியாளர் கழகம் (S.A.E) வகுத்துள்ள சூத்திரம். அதாவது, ஒரு நிமிட

517

உந்து தண்டின் வேகத்திற்கு 1000 அடி என்ற அடிப்படையில், குதிரைத்திறன் (H.P) = (D2xN)

2.5 D = நீள் உருளையின் துவாரத்தின் விட்டம் (அங்குலத்தில்). N: நீள் உருளைகளின் எண்ணிக்கை, 2.5 மாறாத எண்.

S.A.E. or Society : உந்து ஊர்திப் பொறியாளர் கழகம் (S.A.E.) : S.A.E. என்பது உந்து ஊர்திப் பொறியாளர் கழகம் (Society of automotive engineers) என்பதைக் குறிக்கும். எந்திரவியல் உறுப்புகளில் S.A.E. என்ற சுருக் கெழுத்துகள் இருந்தால், அந்த உறுப்பு இந்தக்கழகம் நிர்ணயித்துள்ள தர அளவுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படும்.

S.A.E. Steels: எஸ்.ஏ.இ.எஃகு: உந்து ஊர்திப் பொறியாளர் கழகம்: (S A.E.) எஃகினை வகைப்படுத்துவதற்கு ஒரு வகை எண்மான முறையைப் பயன்படுத்தி வருகிறது. இந்த எண்ணின் முதல் இலக்கம், ஒர் எஃகு பொதுவாக, கார்பன் எஃகு, நிக்கல் எஃகு, நிக்கல் குரோமியம் முதலியவற்றில் எந்த வகையைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும். இரண்டாவது இலக்கம், உலோகக் கலவைகளில், முக்கிய