பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Saf

518

Sal


உலோகக் கலவைத் தனிமம் எது என்பதைக் குறிக்கும். கடைசி இரண்டு அல்லது மூன்று இலக்கங்கள், கார்பனின் அளவைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக, 2345 என்ற எண், 3% நிக்கல், 0.45% கார்பன் கொண்ட நிக்கல் எஃகினைக் குறிக்கும்.

Safe carrying capacity: (க.க.) காப்புச் சுமைத் திறனளவு : எல்லா வடிவளவுகளிலுமுள்ள செம்புக் கம்பி களுக்கு மின்விசையை பாதுகாப்பாகக் கொண்டு செல்வதற்கான திறனளவு அட்டவணைப்படுத்தப் பட்டுள்ளது. இந்தத் திறனளவு ஆம்பியர்களில் குறிக்கப்பட்டிருக்கும். மின் கடத்திகளைப் பொருத் தும்போது இந்தத் திறனளவுக்கு மேற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

Safe edge: (பட்.) காப்புமுனை: ஓர் அரத்திலுள்ள வெட்டுமுனையல்லாத பகுதி. ஒரு முனைப்பகுதியில் அராவும் போதும் அண்டைப் பரப்பினை அரம் அராவி விடாமல் இந்த முனை காக்கிறது.

Safe load: (பொறி.) காப்புப்பாரம்: எந்திரத்தில் செயற்படும் அழுத்தத்திற்கு மேற்படாத வகையில் ஒரு பகுதி தாங்கிக் கொள்ளக்கூடிய பாரத்தின் அளவு.

Safety factors: (பொறி.) காப்புறுதிக் காரணிகள் : எதிர்பாராத சூழ்நிலைகளில் எந்திரங்களில் பாரம் சற்று அதிகமாகி விட்டால், அதைத் தாங்கிக் கொள்ளும் வகை

யில் காப்புறுதியாக அமைக்கப்படும் காரணிகள்.

Safety lamp; (கணி.) காப்பு விளக்கு: சுரங்கத் தொழிலாளர்கள் பயன்படுத்தும் எளிதில் தீப்பற்றாத விளக்கு.

Safety paper : (அச்சு.) இணைகாப்புத் தாள் : பொருளகக் காசு முறிக்குரிய போலி செய்ய முடியாத தாள் வகை.

Safety switch (மின்.) காப்பு விசை: ஒர் இரும்புப் பெட்டியில் வைத்து, வெளிப்புறமாக இயக்கப்படும் ஒரு கத்தி முனை மின் விசை

Safety valve: (பொறி.) காப்பு ஓரதர்: கொதிகலனில் அழுத்த எல்லை மிகும் போது தானே திறந்து கொண்டு நீராவி அல்லது நீர் வெளியேற இடமளிக்கும் அமைவு.

Sag : புடை சாய்வு : பளுவினால் அல்லது அழுத்தத்தினால் அமிழ்ந்து தாழ்வுறுதல்.

காற்றொதுக்கப் பக்கமாகச் செல்லும் தன்மை.

Saggar : சூளைக்களிமண்: உறை நுட்பமான களிமண் பொருள்களைச் சூளையில் சுடும் போது அவற்றை வைப்பதற்கான களிமண் உறை.

Sal ammoniac : (வேதி.) நவச்சாரம் : அம்மோனியம் குளோரைடு (NH4CL). வாயு உற்பத்தியில் துணைப்பொருளாகக் கிடைக்கி