பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

றது. பற்ற தைத்தல், சாயப் பொருள்கள் உற்பத்தி, காலிக்கோ அச்சு முதலியவற்றில் உருகு பொருளாகப் பயன்படுகிறது.

Salon : (க.க.) வரவேற்பு அறை: வரவேற்புகள் நடத்தவும் காட்சிப் பொருள்களை வைப்பதற்கும் பயன் படும் ஒரு பெரிய அறை.

Sal soda : (வேதி.)சலவைச் சோடா : கண்ணாடி தயாரிப்பு சோப்பு உற்பத்தி, துணிகளைச் சலவை செய்தல், சாயமிடுதல், காகித உற்பத்தி போன்றவற்றில் பயன்படுத்தப்படும் சலவை சோடா.

Salt : (வேதி.) உப்பு : ஒர் உப்பு மூலத்தினால் ஒர் அமிலத்தைக் காடி - காரச் செயல்கள் இரண்டுமற்றதாகச் செய்யும்போது உண்டாகும் ஒரு பொருள். உலோகத் தனிமமும், அலோகத் தனிமமும் அடங்கிய ஒரு கூட்டுப் பொருள்.

Salt of tartar : (வேதி.) பொட்டாசியம் கார்பனேட்டு : புடமிடப்பட்ட சாம்பரக் கரியகை CK2CO3H2O).

Salt of vitriol : துத்தக் கந்தகி.

Salt of wisdom:பாதரச நவச்சிய பாசிகை.

Saltpeter: வெடியுப்பு: பொட்டாசியம் நைட்ரேட்டு (KN03) வெடி மருந்திலும் இறைச்சிக் காப்பிலும் மருந்துகளிலும் பயன்படும் வெண் படிக உப்பு.

San

519

San


Samite: பொன்னிழையாடை: பொன்னிழைகள் இடையிட்டு நெய்யப் பெற்ற இடைக்கால உயர் ஆடை வகை.

Sandal wood:சந்தன மரம்: நறு மணமுடைய நெருக்கமான அகவரி வண்ண நெருக்கமுடைய கனமான மரம். கிழக்கிந்தியத் தீவுகளில் தோன்றியது.

Sand blasting: மணல் உதைப் பீற்று: கண்ணாடி முதலியவற்றின் மேற்பரப்பைத் திண்ணிதாக்க வழங்கப்பெறும் அழுத்த வளியுடன் கூடிய மணல் பீற்று.

Sanding: மணல் மெருகு: மேற் பரப்புகளுக்கு மணல் மூலம் மெரு கூட்டுதல்.

Sand paper: உப்புத் தாள்: கூர்மையான மணல் பூசிய தாள். இது உராய் பொருளாக, முக்கியமாக மரவேலைப்பாடுகளின் மேற்பரப்புகளுக்கு மெருகிடு பொருளாகப் பயன்படுகிறது. இதனைப் 'பளிங் குத்தாள்' என்றும் கூறுவர்.

Sandstone: மணற் பாறை: சிலிக்கா அய ஆக்சைடு, சுண்ணாம்புக் கார்பனேட்டு ஆகியவற்றின் மூலம் பிணைக்கப்பட்டு அழுத்த முற்ற மணல் அடுக்குக்கல் கட்டிடக் கல்லாகப் பயன்படுகிறது. இயற்கை மணற்பாறையினால் சாணைக் கற்கள் செய்யப்படுகின்றன.

Sanitary: சுகாதாரம்: உடல் நல மேம்பாட்டிற்குரிய; சாக்கடைக் கழிவுநீக்கத்திற்குரிய.