பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



San

520

Saw


Sanitary sewer: சாக்கடை நீர்க்கால்: கழிவு நீரை வெளியேற்றுவதற்கான குழாய் அல்லது சுரங்க வழி.

Sanitation (பொறி.) சாக்கடை நீக்கம்: சாக்கடைக் கழிவு நீக்கத்திற்குரிய ஏற்பாடுகள்.

Sans-serif: (அச்சு.) மொட்டை அச்சுரு: அச்சுருவகையில் ஓரங்கட்டாத மொட்டை முனையுடைய அச்சுரு. Sap: தாவர உயிர்ச் சாறு: தாவரங்களின் வளர்ச்சிக்கு இன்றியமையாத சாறு.

Sap wood: மென்மரம்: புறமரத்தின் மென்மையான உட்பகுதி.

Sash; (க.க.)பலகணிச் சட்டம்: பல கணியின் சறுக்குக் கண்ணாடிச் சட்டப் பலகை.

Sesh chain: பலகனிச் சட்ட சங்கிலி: சறுக்குப் பலகணிச் சட்டம் இயக்கும் பளுவேந்திய சங்கிலி,

Sash weight: பலகனிச் சட்ட இயக்கு பளு: சறுக்கு பலகணிச் சட்டத்தின் இயக்கு பளு.

Satellite: துணைக் கோள்: ஒரு கோளைச் சுற்றிச் சுழலும் சார்புக் கோள்,

Satellite television station: செயற்கைக் கோள் தொலைக்காட்சி கிலையம் : ஒரு தொலைக்காட்சி

நிலையத்தில் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரே இணைவனத்திலிருந்து ஒளிபரப்பப்படுமானால் அதனைச் செயற்கைக் கோள் தொலைக்காட்சி நிலையம் என்பர். இந்த நிலையம் இணைவன நிகழ்ச்சிகளோடு, உள்ளுர்ச் செய்திப் படங்களையும் ஒளிபரப்பும். இந்நிலையம், ஒரு தலைமை நிலையத்தின் ஒளிப்பரப்புப் பகுதிக்குவெளியேயுள்ள சமுதாயத்திற்கும் பணிபுரிய முடியும்.

Satin wood: முத்திரை மரம்: ஒரு வகை மென்மரம். முக்கியமாக இலங்கையில் காணப்படுகிறது. கனமானது; வெண்மை கலந்த நிற முடையது. மெல்லிழை போன்ற கோடுகளுடையது. உயர்தரமான அறைகலன்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.

Saturated steam: பூரித நீராவி: ஒரு குறிப்பிட்ட அழுத்த நிலைக்கு நேரிணையான கொதி நிலை வெப் பத்தில் உள்ள நீராவி.

நீராவி எந்த நீரிலிருந்து உண்டாகிறதோ அந்த நீருடன் தொடர்பு கொண்டுள்ள நீராவி.

Saturation: (மின்.) செறிவு நிலை: பொருளில் மின்னாற்றல் செறிந்துள்ள நிலை. இந்த நிலையை எட்டியபின் ஆம்பியரை அதிகரித்தாலும் காந்தவிசைக் கோடுகளின எண்ணிக்கை அதிகரிப்பதில்லை.

Sawhorse: (மர.வே.) அறுபணைப்புச் சட்டம்: தச்சர்கள் பயன்படுத்தும் வழக்கமான சாய்கால்.