பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Sca

522

Scr


தொலைவுக்கனுப்பப்படும் படத்தின் இடம் வலம் செல்லும ஒரு கோடு.

Scantling: (க.க.) மரப்பட்டியல்: 5 அங்குலத்திற்குக் குறைவான அகலத் திட்டங்களையுடைய மரப்பட்டியல்.

Scarehead: பரபரப்புத் தலைப்பு: செய்தித் தாள்களில் பரபரப்பூட்டக் கூடிய கொட்டை எழுத்துச் செய்தித் தலைப்பு.

Scarfing: சமநிலைப் பொருத்தீடு: மரம், தோல், உலோகம் முதலியவற்றில் வாய்களைச் சமநிலைப் படுத்தி ஒன்றாக இணைத்துப் பொருத்துதல்.

Scientific: அறிவியல் முறையான: அறிவியல் சார்த்த திட்பநுட்பம் வாய்ந்த,

Scierometer: (பொறி.) உலோகத் திண்மைக் கணிப்புமானி: உலோகங்களின் கடினத் தன்மையைக் கணித்தறிவதற்கான ஒரு கருவி. உலோகத்தின் மேற்பரப்பில் இதனை ஒரு முறை முன்னேயும் பின் னேயும் பாய்ச்சிக் கிடைக்கும் சிம்பினை ஒரு தர அளவுடைய சிம்புடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கடினத் தன்மை கணக்கிடப்படுகிறது.

Sconce: மெழுகுத்திரி: அலங்கார மெழுகுவர்த்தி விளக்கு.

Scored cylinders: உள்வரி நீள் உருளை: (தானி. எந்.) உந்து ஊர்தி போன்றவற்றின் எஞ்சின்களிலுள்ள பளபளப்பான நீர்

உருளைகளின் சுவர்களில், நீர் உருளைக்குள் அயல் பொருள்களை உட்செலுத்துவதற்காக உள்வரியிடுதல். இவ்வாறு உள்வரியிட்ட உருளைகள் உள்வரி நீள் உருளை கள் எனப்படும்.

Scoring of pistons and cylinders : (தானி.) உள்வரியிடல் : நீள் உருளைகளுக்கும், சுழல் தண் டுகளுக்கும் முறையாக மசகிடுவதற்காக உள்வரியிடுதல்.

Scotia : (க.க.) தூண்டிக் குழிவு: ஒரு தூணின் அடிப்பகுதியில் காணப்படும் குழிவான வார்ப்படம்.

Scrap : உலோகச் சிம்பு : இரும்பு வார்ப்படத் தொழிற்சாலை அடுப்பில, பயனற்றதென ஒதுக்கித் தள்ளப்படும் தேனிரும்புத் துண்டுகள். இத்துண்டுகளை மீண்டும் உருக்கலாம்.

Scrap iron: (உலோ.) துண்டு இரும்பு : ஒதுக்கித் தள்ளப்படும் இரும்பு அல்லது எஃகுத் துண்டுகள் அனைத்தையும் இது குறிக்கும. இதனைப்புய எஃகு தயா ரிக்கப் பயன்படுத்துவார்கள்.

Scraper: செதுக்குக் கருவி: மரத்தின் பரப்புகளை வழவழப்பாக்குவதற்குப் பயன்படுத்தப்படும் எ ஃகி னாலான சுரண்டு கருவி. உலோகத் தொழிலாளர்களும் இதனைப் பயன்படுத்துவர்.

Scraper plane:(மர. வே.)செதுக்கு இழைப்புளி : இழைத்து