பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

செங்கோன முக்கோணத்தின் பிறிது கோண வகையில் சாய்வரை அடி வரைகளின் விகிதம்,

Secondary: (மின்.) கிளர்மின் கம்பிச்சுருள்: கிளர் மின்னோட்டத்தைத் தாங்கிச் செல்லும் கம்பிச் சுருள். இது, 'அடிப்படைக் கம்பிச் சுருள்" எனப்படும் மற்றொரு மின் கம்பிச் சுருளுடன் காந்த முறையில் இணைக்கப்பட்டிருக்கும்.

Secondary colour: (அச்சு.) கலவை நிறம்: சிவப்பு, மஞ்சள், ஊதா ஆகிய முதன்மை நிறங்களில் இரு நிறங்களைக் கலப்பதால் உண்டாகும் நிறம். மஞ்சளையும், ஊதாவையும் கலப்பதால் பச்சை நிறம் உண்டாகும்.

Secondary-type glider(வானூ.) துணைமைச் சறுக்கு விமானம்: முதனிலைச் சறுக்கு விமானத்தை விட அதிக வானூர்தி இயக்கத் திறனுடையதாக வடிவமைக்கப்பட்ட சறுக்கு விமானம்.

Second-class lever: (எந் .)இரண்டாம் நிலை நெம்புகோல்: ஆதாரத்திற்கும் விசைக்குமிடையே எடையை வைப்பதற்குள்ள நெம்பு கோல்.

Seconds : மட்டச்சரக்குகள்: முதல் தரமாக அல்லாத சரக்குகள், அச்சுத் தொழிலில் 'மட்டச் சரக்குகள்' என்பது காகிதத்தைக் குறிக்கும.

Section:(க.க;எந்.)வெட்டுவாய் வரைபடம் : ஒரு பொருள்

Sec

526

Sel


செங்குத்தாக அல்லது கிடைமட்டமாக வெட்டப்பட்டது போன்று, அப்பொருளின் உள்ளுறுப்புகளைக் காட்டும் வரைபடம்.

Sector : (கணி.) வட்டகோணப்பகுதி : இருபுற ஆரை எல்லையுடைய வட்டக்கூறு.

Sediment : படிவு:ஒரு திரவத்தின் அடியில் வண்டலாகப் படியும் மண்டி.

Sedimentary rock : (கணி.) படிவுப் பாறை : நீருக்கு அடியில் அழுத்தம் காரணமாக உண்டாகும படிவியற்படுகைப் பாறை.

Segment : வெட்டுக்கூறு : ஒரு வ ட் ட த் தி ன் நாண் வரைக்கும் அதன் வில்வரைக்கும் உள்ளிடானப் பகுதி.

Segmental arch: (க.க .) பிறைவில் வளைவு : மையம் உள்ளடங்கலாக இல்லாத பிறை வில்வளைவு

Seismography: (இயற்.) நில நடுக்கக்கருவி : நில நடுக்கத்தைத் தானாகவே பதிவு செய்யக்கூடிய ஒரு கருவி.

Seismogram : (இயற்) நில நடுக்கப் பதிவு: நிலநடுக்கக் கருவி தரும் நிலநடுக்கப் பதிவு.

Seismography : (இயற்.) நில நடுக்க ஆய்வியல் : நிலநடுக்கம் பற்றிய ஆய்வியல் துறை.

Selectivity : தேர்திறம்: