பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



Sel

526

Sem


வானொலிகளின் பெறலமைவில் குறிப்பிட்ட நீள அழலையினை மட்டும் பற்றிச் செயற்படும் திறம்.

Self . acting : தற் செயற்பாடு : புறத்துாண்டுதல் இல்லாமல் தானாகவே செயற்படுதல்.

Self - excitation : (மின்.) தற்கிளர்ச்சி : நேர்மின்னோட்ட மின்னாக்கியின் இணைப்புகளிலிருந்து பெறும் நேர்மின்னோட்டத்தினை, அதன் மின் காந்தப்புலனுக்கு மின்னோட்டம் அளிப்பதற்காக அளித்தல்.

Self-excited : (மின்.) தற்கிளர்ச்சி மின் பொறி : தனது புலத்திற்கு அளிப்பதற்காகத் தனது சொந்த மின்னோட்டத்தை உண்டாக்கிக் கொள்ளும் பொறி.

Self – excited alternator : (மின்.) தற்கிளர்ச்சி மாறு மின்னாக்கி : இது ஒரு மாற்று மின்னோட்டம் உண்டாக்கும் கருவி. இது தனது முதன்மைப் புலங் களுக்கு காந்தமூட்டுவதற்காக, நேர்மின்னோட்டம் உண்டாக்கும் பலவழிமுறைகளில் ஒன்றின் மூலம் நேர்மின்னோட்டத்தை உண்டாக்குகிறது.

Self-hardening steel: (உலோ.) தானாகக் கெட்டிப்படுத்திய எஃகு : காற்றில் குளிர்விப்பதன் மூலம் தானாகக் கெட்டிப்படுத்தப்படுத்திய ஒரு கலவை எஃகு. இது கருவிகள் செய்வதற்குப் பயன்படுகிறது.

Self-induced current (மின்.)தற்துண்டல் மின்னோட்டம் : ஒரு மின்கம்பிச் சுருளில் காந்தப்புலம் திசையில் அல்லது செறிவில் மாற்றமடையும்போது அதே கம்பிச் சுருளில் அமைந்துள்ள தற்துாண்டல் மின்னியக்கு விசையினால் உண்டாகும் மின்னோட்டம்.

Self-inductance : (மின்.) தற்தூண்டம் : ஒரு மின் சுற்று வழியில் கம்பிச்சுருளின் திருப்பங்களிடையே நிகழும் மின்காந்தத் தூண்டல் என்னும் நிகழ்வு.

Self-induction: (மின்.) தற்தூண்டல்: ஒரு மின் கம்பிச்சுருளின் காந்தப்புலம் அதன் மீதே ஏற்படுத்தும் தூண்டல் விளைவு.

Selvage : ஆடை விளிம்பு ! ஆடை கிழிப்பதற்குரிய திண்ணிய ஊடு விளிம்பு

Semaphere : விளக்கக் கைகாட்டி: அசையும் கைகளும் சைகை விளக்கமைப்பும் கொண்ட இருப்புப் பாதைக் கைகாட்டி மரம்.

Semi chord : அரைநான் : ஒரு வட்ட வரையின் நாணின் நீளத்தில் சரி பாதி.

Semi circle: அரை வட்டம் :வட்டத்தின் சுற்றுவரைக் கோட்டுக்கும் விட்டத்திற்கும் உள்ளடங்கிய அரைவட்டம்.

Semicircular arch: (க.க.) அரை வட்டக் கவான்: வளை முகட்டின் உட்புற வளைவு அரைவட்டமாகவுள்ள கவான்.