பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கொண்டையுடைய சமதளங் கொண்ட திருகு. இது நகர்த்திச் சரியமைவு செய்யக் கூடிய உறுப்புகளை உரிய நிலையில் நிறுத்தி இறுக்குவதற்குப் பயன்படுகிறது. இது பெரும்பாலும் வெப்பப் பதனாக்கம் மூலம் தயாரிக்கப்படுகிறது.

Set square: முக்கவர்: செங்கோண முக்கோண வடிவ வரை கருவி.

Setting hammer: (உலோ.) பொருத்துச் சுத்தி: ஒருமுனை கூரிய முனையுடன் சாய்தளமான கொண்டையுடையதாகவும், இன்னொரு தட்டையான முனையுடையதாகவும் சதுரமான அடிக் கட்டையுடன் செய்த சுத்தி. இது முனைகளில் அல்லது கோணங் களில் வேலைப்பாடு செய்வதற்குப் பயன்படுகிறது.

Settle: விசிப்பலகை: உயர் சாய்மானமும் கைகளும் அடியில் அறைப்பெட்டிகளும் உடைய விசிப் பலகை,

Settlement: (மர.வே.) அமிழ்வு: நிலம், கட்டிடம், சுவர் ஆகியவற்றின் அமிழ்வு, பொதுவாக அடித் தளத்தின் வலுக்குறைவு, கட்டுமானப் பொருள்களின் தரக் குறைவு, பதப்படுத்தப்படாத மரம் ஆகியவற்றினால் இது ஏற்படுகிறது.

Severy (க.க.) குவிமாடமோடு: பல்கெழு வளைவுக் குவிமாடமோட்டுப் பகுதி.

48

Sev

529

Sha


Sevres: சீனமங்கு: விலைமிகுந்த, சீனக் களிமண்ணினாலான அலங்கார மங்குப்பாண்டவகை,

sewer: (கம்.) கழிவு நீர்க்கால்: நகரக் கழிவுநீர்க் குழாய்.

Sextant: (கணி.) மாலுமிக் கோண மானி: மாலுமிகள் பயன்படுத்தும் நிலப்பரப்பாய்வுக் கோணமானி.

அறுகோண வட்டப்பகுதி: வட்டத்தின் ஆறில் ஒரு பகுதி.

Shackle: (எற்.)சங்கிலிக் கொளுவி: ஒரளவு இயங்குவதற்கு அனுமதிக்கக் கூடிய, சங்கிலிப் பூட்டும் கொளுவி.

Shackle bolt: (எந்.)முளையில் கொண்டி: முளையில்லாத மாட்டும் தாழ்.

Shade: நிறத்திண்மை: வண்ணங்களில் செறிவான அல்லது மங்கலான வண்ணப்படி நிலை.

Shaft: (எந்.) சுழல் தண்டு: எந்திரங்களில் சுழலும் உறுப்புகளுக்கு ஆதாரமுள்ள சுழல்தண்டு.

Shake; மரவெடிப்பு: வெட்டு மரத்திலுள்ள ஒரு வெடிப்பு அல்லது முறிவு. இது மரத்தில் ஆண்டு வளையங்களுக்கிடையே ஒரு பிளவை உண்டாக்குகின்றன.

Shakes: (க.க) அரை ஆப்பு: கையினால் செய்த அரை ஆப்பு.