பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Sha

530

She


Shank: (எந்.) எந்திரத் தண்டு: ஒரு கருவியை அதன் கைப்பிடியுடன் அல்லது குதை குழியுடன் இணைக் கும் உறுப்பு. கருவியின் வெட்டிடைப் பகுதி.

Shaper: (எந்.) வார்ப்புப் பொறி: உலோகங்களுக்கு உருவங்கொடுக்கும் கடைசல் வார்ப்புப் பொறி.

Shapes: (பொறி.) உலோக உருவப் படிவம்: உலோகத்தில் செய்யப்படும் பொருள்களின் உருமாதிரிப் படிவம்.

Sharp sand: (க.க.)கூர்மணல்: கூர்மையான கோணங்களையுடைய தூய்மையான மணல்.

Shatter-proof glass: (தானி.) உடையாத கண்ணாடி: அதிர்ச்சியைத் தாங்கி உடையாமலிருக்கும் ஒருவகைக் கண்ணாடி. இது இப்போது உந்து ஊர்திகளில் பயன்படுத்தப்படுகிறது. இது அதிர்ச்சியைத் தடுப்பதற்காக நடுவில் பிளாஸ்டிக் தகட்டினைக் கொண்ட இரு கண்ணாடித் துண்டுகளினாலானது.

Shear: (பொறி.) தடை விசை: இரு நேரிணையான விசைகள் எதிர்த்திசைகளில் இயங்குவதன் மூலம் ஒரு பொருள் வெட்டப்படுவதை எதிர்க்கும் தடை விசை.

                                                 கத்திரி: கத்திரிமூலம் வெட்டுதல்.

சறுக்குப் பெயர்ச்சி: அழுத்தங் காரணமாகப் பொருளின் மெல்லடுக்குகளின் ஒத்திணைவான

சறுக்குப் பெயர்ச்சி.

Shears : உலோகக் கத்திரி: உலோகங்களைக் கத்திரிப்பதற்குப் பயன்படும் கருவி.

Sheave wheel : (பொறி.) கப்பிச் சக்கரம் : வட்டம் அல்லது சங்கிலி ஒடுவதற்கான பள்ளம் உடைய சக்கரம்.

Sheeter lines : (குழை.) நறுக்குக் கோடுகள் : பிளாஸ்டிக் தகடுகளில் கணிசமான பரப்பளவில் பர வலாகவுள்ள இணைக் கீறல்கள் அல்லது புடைப்பு வரைகள். இவை துண்டுகளாக நறுக்கும்போது ஏற்படும் கோடுகள் போன்று அமைந்திருக்கும்.

Sheet metal gauge : (எந்.) உலோகத்தகடு கன அள வுமானி: உலோகத்தகட்டின் கனத்தை அளவிடுவதற்குப் பயன்படும் ஒரு வகை மானி.

Sheet metal working : உலோகத் தகடு வேலைப்பாடு : தகட்டு வடிவிலுள்ள உலோகங்களில் செய்யப்படும் வேலைப்பாடுகள்.

Sheet steel : (உலோ. வே.) தகட்டு எஃகு: உலோகத்தகட்டு வேலைப்பாடு செய்யும் தொழிலா ளர்கள் பயன்படுத்தும் மெல்லிய எஃகுத் தகடுகள். இதன் எண்ணிக்கையைக் கொண்டு இதன் கனம் கணக்கிடப்படும். கனமான தகடுகள் பாளங்கள் எனப்படும்.

Sheet tin : (உலோ.வே.)வெள்