பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலிக்கன் அடங்கிய எஃகு, இது கம்பிச் சுருள்கள் தயா ரிக்கப் பயன்படுகிறது. 3% முதல் 5% வரை சிலிக்கன் அடங்கிய எஃகு காந்த இயல்புகளைக் கொண்டது. இது மின்காந்தங்களில் பயன்படுகிறது.

Sill: (க.க.) பலகணிப்படிக்கட்டை: கதவு அல்லது சன்னல் அடியிலுள்ள மரத்தினாலான அல்லது கல்லினாலான அடித்தளம்.

Sill high: (க.க ) வாயிற்படிக்கல் உயரம்: தரைமுதல் வாயிற்படிக்கட்டை வரையிலான உயரம்.

Silt: வண்டல்: ஒடும் தண்ணிரினால் படியும் நுண்ணிய சேற்றுப் படிவு.

Silumin (உலோ.) சிலுமின்: அலுமினியமும், சிலிக்கனும் கலந்து ஒருவகை ஜெர்மன் உலோகக் கலவை. மிகுந்த நெகிழ்திறனுடையது; குறைவாகச் சுருங்கக் கூடியது. இதனால் நுட்பமான வார்ப்படங்கள் செய்யப் பயன்படுகிறது.

Silver: (சனி.) வெள்ளி (Ag): வெள்ளை நிறம் கொண்ட, நெகிழ் திறன் கொண்ட, தகடாக்கக் கூடிய ஒர் உலோகம், இதன் உருகு நிலை 1750° F. ஒப்பு அடர்த்தி தூய்மைக்கேற்ப 10 முதல் 11.

Silver solder: வெள்ளிப் பற்றாசு: ஒரு பகுதி செம்பும், 2 முதல் 4 பகுதிகள் வரை வெள்ளியும் கொண்ட சிறு திற உலோகக் கல

Sil

585

Sin


வை. அணிகலன் தயாரிப்போ இதனை பற்றவைப்பதற்கான உலோகமாகப் பயன்படுத்துகின்றனர்.

Silver white: வெள்ளிப் பூச்சு: வெண் ஈயத்தின் தூய்மையான வகை. வெள்ளிப் பூச்சுக் கலவையாகப் பயன்படுகிறது. தூளாக்கிய நேர்த்தியான சிலிக்கா.

Similar poles: (மின்.) ஓத துருவங்கள: ஒன்றையொன்று எதிர்க்கும் இரு காந்தத் துருவங்கள், ஒத்த துருவங்கள் எனப்படும். இவை காந்தமுறையில் ஒத்திருப்பவை.

Simple equation: (கணி.) நேர் சமன்பாடு: கணிதத்தில் விசைப் பெருக்க உரு இல்லாத சமன்பாடு.

Simple machine: (எந்.) விசையாக்கமற்ற பொறி: விசை உற்பத்தி செய்யாமல், நெம்புகோல், புல்லி, சாய்தளம், திருகு, சக்கரம், அச்சு, ஆப்பு போன்றவற்றில் ஒன்றின் செயலினால் இயங்கும் பொறி.

Sine (கணி.) நிமிர் வீதம்: செங்கோண முக்கோணத்தின் மீது பிறிதுகோண எதிர் வரை அடி வரை வீத அளவு.

Sine bar: (கணி.) நிமிர் வீத அளவு கருவி கோணங்களைத் துல்லியமாக அளவிடுவதற்கான ஒரு சாதனம்.

Single acting: (எந்.) ஒரு திசை இயக்கம்: நீராவி எந்திர வகையில் உந்து தண்டின் ஒரு பக்கம் மட்டுமே நீராவி ஏற்கிற இயக்கம்.