பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரத்திலிருந்து எடுக்கப்படும் நாரிழை, இது வலிமை வாய்ந்தது; நெடுநாள் உழைக்கக் கூடியது.

Site (க.க.) மனை : ஒரு கட்டிடம் அமைந்துள்ள அல்லது ஒரு கட்டிடம் கட்டப்படவிருக்கிற எல்லை வரையறுக்கப்பட்டுள்ள இடம்.

Size : (1) தாள் மெருகு : காகிதத்திற்கு மெருகுப் பசையிட்டு பளபளப்பாக்குவதற்குப் பயன்படும் பிசின் பொருள்,

(2) தாள் வடிவளவு : குறிப்பிட்ட நீள அகல அளவுடைய தாள் வடிவளவு.

Size control : வடிவளவுக் கட்டுப்பாடு : தொலைக்காட்சியில் கிடைமட்டத்திலும், செங்குத்தாகவும் படத்தின் வடிவளவை அதிகரிக்கவோ குறைக்கவோ அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அமைவு,

Sizing : வகைப்படுத்துதல் : காகிதத்தை, அதன் நீர் அல்லது மை எதிர்ப்புத் தன்மைக்கேற்ப வகை மாதிரிப்படுத்துதல்.

Skeletonizing (அச்சு.) மென் கீற்று அச்சுருவாக்கம் : ஒர் அச்சுப் படிவத்தில் வண்ணப் பகுதிகளை நீக்கி விட்டு, மென் கீற்று அச்சுருவை மட்டும் பதிவு செய்வதற் காகப் பூட்டி வைத்தல். இதனால் பல்வேறு வண்ணங்களில் அச்சிட இயலும்.

Skelp (உலோ.) குழாய்த்தகடு

44

Ske

537

Ski


குழாய்கள் செய்வதற்கான எஃகு அல்லது இரும்புத் தகடு.

Sketch : திட்ட உருவரை : முதல் நிலை மாதிரி; புனையா ஒவியம்; நினைவு வரிக்குறிப்பு.

Skew : (எந்.) ஓரச்சாய்வு : செங்கோணத்தில் இல்லாத சாய்வு.

Skew back (க.க.) சாய்வுதைவு: கவானின் இருமுனைகளிலுமுள்ள சாய்வுதைவுப் பரப்பு.

Skew back saw : சாய்வுதைவு ரம்பம்: எடை குறைவாக இருக்கும் வகையில் முதுகுப்புறம் வளைந் துள்ள கைரம்பம்.

Skew bridge: சாய் குறுக்குப் பாலம்: இருபுறப் பக்கங்களிடையே சாய்வாகச் செல்லுங்கட்டுமானம்.

Skew chisel: (மர.வே.)சாய்வுளி: வெட்டு முனை செங்கோணமாக இல்லாமல், மையப்பகுதியிலிருந்து சாய்கோணத்தில் அமைந்துள்ள உளி,

kew curve:முப்படைச் சாய்வு வளைவு: தன் தளங் கடந்த சாய்வுடைய மூவளவை வளைவு.

Skew whee : சாய்பற்சரிவுச் சக்கரம் : ஒன்றையொன்று இயக்கும்படி அமைக்கப்பட்ட வேறு வேறு தளத்தில் சுழலும சாய்பற்சக்கர அமைவு.

Skid: (வானூ.) விமானச் சறுக்குச்