பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Sky writing : (வானூ.) புகைவரி எழுத்து: வானூர்தி விளம்பரங்களில் பயன்படுத்தப்படும் புகைக் கோட்டு எழுத்து முறை.

Slab: பாளம்: தட்டையான மேற்பரப்புடைய கல், பளிங்குக் கல், கான்கிரீட் போன்றவற்றினாலான சிலாத்துண்டம்.

Slab-stone: பாளக்கல்:பாளம் பாளமாகப் பிளவுறும் கல்,

Slack (எந்.) முனைப்புக் குறைவு: எந்திரத்தில் நீக்கப்பட வேண்டிய உறுப்புகள் தளர்வுறுதல்.

Slag (வார்.) உலோகக் கசடு: வார்ப்படத் தொழிற்சாலைகளில் உருக்கிய சுரங்க உலோகக் கசடு.

Slag cement: சாம்பல் சிமெண்ட் : ஊதுலைச் சாம்பற் கட்டியினாலான சிமெண்ட்.

Slag wool: கனிம இழைக்கம்பிளி: உலோகக் கிட்டப்பா கூடான நீராவியால் இழைக்கப்படும் செயற் கைக் கம்பளி.

Sledge-hammer: கொல்லுலைச் சம்மட்டி: இரு கைகளினாலும் கையாளப்படும் நீண்ட கைப்பிடியுள்ள சம்மட்டி. இது கருமானின் கொல்லுலைக் கூடத்தில் பயன்படுத்தப்படுகிறது.

Sleeker: (வார்.) மெருகு கருவி:வார்ப்படங்களில் சொரசொரப்பான பகுதிகளைப் பளபளப் பாக்குவதற்கு ம், வார்ப்படத்தி

Sle

539

Sli


லிருந்து மணலை அகற்றுவதற்கும் பயன்படும் கருவி.

Sleeper (க.க) குறுக்குக் கட்டை: தண்டவாளக் குறுக்குக் கட்டை, குறுக்கு விட்டம்.

Sleeve: (எந்.) பெருங்குழல்: கம்பி உருளையினுள் செருகப்பட்ட குழல்.

Sleeve nut. (பொறி.) இடையிணைப்பு உறழ்சுரை: இரு சலாகைகளை இணைப்பதற்குப் பயன்படும் வலம் - இடம் புரியிழைகள் உடைய, தக்கவாறு அமைத்துக் கொள்ளக்கூடிய நீண்ட கரையானி.

Sleeve valve motor: (தானி.) இழையுருளைத் தடுகிதழ்மின்னோடி: உறழ்சுரைகளையும் உந்து தண்டுகளையும் கொண்ட தடுக்கிதழ் அமைவுடைய ஒரு மின்னோடி.

Slice or slice bar: (பொறி.) சுரண்டுகோல்: உலைக்களத்தில் பயன்படுத்தப்படும் துப்புரவுக் கரண்டி,

Slide caliper:நுன்விட்டமானி :நழுவு நுண்படிக் கலமுடைய விட்டமளக்கும் கருவி.

Slide rule: (பொறி.) உழற்படியளவைக் கோல்: நுண்ணளவு காட்டும் நழுவுபடியுடைய அளவுகோல்.

Slide valve: (பொறி.) இழைவடைப்பு: நழுவு இயக்கத்துடன் செயற்படக் கூடிய தடுக்கிதழ்.