பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



Sli

540

Slu


Sliding-keel: இழைவுகட்டை: படகு பக்கவாட்டில் சாயாமல் தடுக்கும் அடிமட்ட மையப்பலகை,

Sliding seat: நெகிழ்விருக்கை: பந்தயப் படகில் துடுப்பு வலிப்பவரின் உடலசைவுக்கேற்ப நெகிழ்ந் தசைந்து கொடுக்கும் அமர்வுபீடம்.

Slip rings: (மின்.) வழுக்கு வளையம் : சுழலும் மின் சுற்று வழிக்கு மின்னோட்டத்தைக் கடத்தும் முறை.

Slip stream (வானூ.)பின்கால் விசை : வானூர்திச் சுழல் விசிறியின் பின்னுந்து காற்றோட்டம்.

Slitter : (அச்சு.) நெக்குவெட்டுருளை: தகடுகளை இடையிட்டு அழுத்திக் கீறும் உருளை இணைக் கருவி.

Slitting saw for metal : (எந்.) உலோக நெக்குவெட்டு ரம்பம் : உலோகங்களை வெட்டுவதற்குப் பயன்படும் மெல்லியவெட்டுக்கருவி.

Slot : (வானூ.) இயைவடுப் பள்ளம் : எந்திரத்தில் மற்றொரு பகுதியுடன் பொருந்தி இயைவதற் கான துளை அல்லது கீறல் அல்லது பள்ளம்.

Slot screwing : துளை விளிம்பு திருகு : திருகாணியின் கொண்டை தெரியாதபடி அதைப் பொருத்துவதற்கான ஒரு முறை.

Slot - machine : துளை விளிம்பு

பொறி : துளைவிளிம்பில் காசு போடுவதனால் இயங்கும் எந்திரம்.

Slot - meter : காசுவீழ்வு அலகுமானி : காசு வீழ்வதனால் அலகு குறித்துக் காட்டுகிற கருவி.

Slow sand filter : (பொறி.) சுணக்க வடிகட்டி : நீரைத் தூய்மையாக்குவதற்கான ஒரு வடிகட்டி : இது விரைவாக வடிகட்டும் பெரிய வடிகட்டிகளிலிருந்து அமைப்பில் வேறுபட்டது.

Sloyd knife : (மர.வே.) மரச் செதுக்குக் கத்தி : மரச்செதுக்கு வேலைப்பாடுகளில் பயன்படுத்தப் படும் கத்தி: அமெரிக்க மரச்செதுக்கற் பயிற்சிக்கு முன்னோடி.

Sludge : குழைசேறு : கொதிகலனில் படிவது போன்ற கசடு.

Slug: (அச்சு.) உலோக வரிப் பாளம் : உருக்கச்சு எந்திரத்தில் கோத்த வரிப்பாளம்.

Slug casting machine : (அச்சு) வரிஉருக்கச்சுப் பொறி : அச்சுருக் கோப்பு இல்லாமல் எழுத்துக்களை வரிப் பாளங்களாக உருக்கு வார்த்து அடிக்கும் அச்சுப்பொறி:

Slur : (அச்சு.) மறைகறை : தெளிவற்ற மறைப்புத் தன்மை, எழுத்தின் மேல் எழுதித் தெளிவற்ற தாக்குதல்.

Slurry :மின் உள்வரிச் சாந்து : மின்னோட்டத்தை மாற்றியமைக்க உதவும் பொறியின் உள்வரி