பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யினனச் சீர் செய்யப் பயன்படுத்தப்படும் நுண்மணல், களிமண் கலந்த அரை நீர்மக் கலவை.

Slushing oil : குழை எண்ணெய்: உலோகங்கள், எந்திர உறுப்புகள் முதலியவற்றில் அரிமானம் ஏற் படாமல் தடுப்பதற்குப் பயன்படும் எண்ணெய்.

Slush molding : (குழை,) குழை வார்ப்படம் : வெப்பத்தால் இளகிக் குளிரில் இறுகும் இயல்புடைய பிசினைச் சூடான வார்ப்படமாக வார்ப்பதற்கான ஒரு முறை .

Small caps (அச்சு.) குறுந்தலைப்பெழுத்துகள் : குறுந்தரத் தலைப்பு வடிவ எழுத்துகள்.

Small plea : (அச்சு.) அச்செழுத்து வடிவளவு : 'புள்ளி அளவுடைய அச்செழுத்து வடிவளவு.

Smalt : (அச்சு) நீலவண்ணப் பொடி : வண்ணம் பூசுபவர்களும் விளம்பர எழுத்தாளர்களும் அலங்கார வேலைப்பாடுகளுக்காகப் பயன்படுத்தும் நீலவண்ணப் பொடி வண்ணம் பூசிய பகுதிகளை காற்றும், வெயிலும் அரித்து விடாமல் பாதுகாக்கவும் இது பயன்படுகிறது.

Smashing : (அச்சு.) அச்சு வரி அழுத்தம்: அச்சு முழுமடித் தாள் வரிசை எண் தட்டையாக அமையும்படி அழுத்தி விடுதல்.

Smelting : (உலோ.)உருக்கு

Sme

541

Sna


தல் : சுரங்கப் பொருள்களை உருக்கி அவற்றிலிருந்து உலோகங்களைப் பிரித்தெடுத்தல்.

Smoking : புகைப் பதனம் : பச்சையான மண் பாண்டங்களிலிருந்து ஈரத்தை அகற்றுவதற்கு முதற்கட்டமாகப் புகையாவி பிடித்தல்.

Smoothing plane; (மர.வே.) இழைப்புளி: தச்சர்கள் பயன்படுத்தும். 9" நீளமும் 1334" முதல் 21/4" வரை அகலமும் உடைய இரும் பினாலான இழைப்புளி.

Smooting trowel: பூசுகரண்டி : சாந்துப் பூச்சுப் பரப்புகளைச் சமப்படுத்துவதற்காகப் பயன்படும் கரண்டி , snake wood: அரவமரம்: பாம்பின் தோல் போன்று வண்ணமுடைய கடினமான தென் அமெரிக்க மரவகை

Snap gauge:விரைவு அளவு கருவி : உட்புற, வெளிப்புற வடிவளவுகளைக் கணித்தறிவதற்கான, தக்கவாறு அமைத்துக் கொள்ள முடியாத அளவீட்டுக் கருவி.

Snap-bolt: விற்பூட்டு: கதவை மூடும் பொழுது தானே பூட்டிக் கொள்ளும் வில்லமைவுத் தாழ்ப்பாள்.

Snap-hook: பற்றிவிடாக் கொளுவி: விற்கருள் மூலம் இயங்கும் தானே பூட்டிக்கொள்ளும் கொளுவி.