பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Soluble glass:படிக்ககிக் கலவை:

செயற்கைக் கற்களைக் கடினப்படுத்தத் தயாரிக்கும் வெடியப் படிக்ககிக் கலவை.

Solute : (வேதி.) கரைவம் : கரைசலில் கரைந்துள்ள பொருள்.

Solution : (வேதி.) கரைசல்: இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட பொருள்கள் பிரிக்க முடியாதவாறு ஒன்றாகக் கலந்து கரைந்த கலவை.

Solvent : (வேதி.) கரைமம் : ஒரு பொருளைக் கரைப்பதற்குப் பயன்படும் மற்றொரு பொருள் கரைமம் ஆகும். உப்பை நீர் கரைக்கும். நீர் ஒரு கரைமம்.

soot : புகைக்கரிக் கறை

Sorts (அச்சு.) தனி எழுத்துரு : தனி எழுத்துருத் தொகுதி.

Sounding balloon: (வானூ.) மீவிசும்பு ஆய்வுக் கூண்டு : மீவிசும்பு நிலை ஆய்வுக்காக அனுப்பப்படும் சிறு கூண்டு.

Sounding - board: ஒலித்தடைத்தட்டி: மேடைமீது ஒலிபரவுதலைத் தடுத்து முன் செலுத்தும் மென் செலுத்தும் பலகை.

Sounding-lead: அடி ஈயக் குண்டு: கடல் ஆழ்மானியின் அடி ஈயக் குண்டு.

Sounding - line (Sounding - apparatus or . Sounding ma

45

Sou

545

Spa


chine : கடல் ஆழமானி: கடல் ஆழம் காண்பதற்குப் பயன்படும் கருவி.

Sounding-rod, அடித்தேக்கமானி:கப்பலில் அடித்தேங்கு நீரளவினைக் காணும் கருவி.

Sound - ranging altimeter: (வானூ) ஒலி வீச்சு உயரமானி: ஒர் ஒலியலை விமானத்திலிருந்து பூமிக்குச் சென்று திரும்புவதற்குத் தேவைப்படும் நேரத்தைக் கணக்கிடுவதை அடிப்படையாகக் கொண்ட குறியீடுகளைக் காட்டும் உயரமானி.

Soundtrack: ஒலி வரி : திரைப்படத் தட்டின் ஒலிவரி.

Sound wave : ஒலி அலை

Space (அச்சு.) எழுத்திடை வெளி: அச்சில் எழுத்துகளுக்கிடையிலான இடைவெளி. தட்டச்சில் சொற் களுக்கிடையிலான இடைவெளி.

விண்வெளி: விண்ணிலுள்ள அகன்ற இடப்பரப்பு.

Space ship : விண்வெளிக் கலம்:விண்வெளிக்குச் செலுத்தப்படும் விசையூர்தி.

Space - travel: விண்வெளிப்பயணம் : விண்வெளி விசையூர்திகளில் விண்வெளிக்குப் பயணம் செய்தல்.

Spacing: (அச்சு.) இடையிடம் விடல்: அச்சில் அழகான தோற்