பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Spa

546

Spe


றப் பொலிவு ஏற்படும் வகையில் சொற்களுக்கும், வரிகளுக்குமிடையில் இடையிடம் விட்டு அமைத்தல்.

Spall: (க.க.) சிம்பு/சிராய்: செங்கற்களை அல்லது கற்களை நொறுக்கி ஆக்கிய சிம்பு.

Span: (வானூ.) இடையகலம் : விமானத்தில் ஒரு இறக்கை முனையிலிருந்து மற்றொரு இறக்கை முனை வரையிலான இடையகல அளவு.

கட்டிடக் கலையில் ஆதாரக் கம்பங்களிடையேயுள்ள தனி வளைவு அளவு.

Spandrel: (க.க.) கவான் மூக்கு: கவான் வளைவுக்கும் அது கவிந்த செங்கோண வட்டத்திற்கும் இடைப்பட்ட மூலையிடம்.

Spanner : புரிமுடுக்கி: திருகு முடுக்கும் அல்லது கழற்றும் கருவி.

Spare: (பட்.) உதிரி உறுப்பு: எந்திரங்கள், பொறிகள், ஊர்திகள் வகையில் வேளைக் காப்பீட்டு உதிரி உறுப்பு.

Spark: (தானி.) மின்விசைப் பொறி: எஞ்சினில் எரிபொருள் எரிதல் உண்டாக்குவதற்கான மின் விசைப்பொறி.

Spark arrester: மின்பொறி காப்பமைவு: மின் கருவிகளில் தீப்பொறியால் சேதம் உண்டாகாதபடி தடுக் கும் அமைவு.

Spark coil: (மின்.) அனற்பொறிச்சுருள்: மிகுந்த செறிவான அனற்பொறி உண்டாக்குவதற்கான மின் கம்பிச்சுருள்.

Spark plபg: (தானி.) அனற்பொறி அமைவு: உந்துபொறி, உள் வெப்பாலைகளில் வெடிக்கலவைக்கு அனற்பொறியூட்டும் அமைவு.

Spark-plug electrodes: (தானி.) அனற்பொறி மின்வாய்கள்: மின் அனற்பொறி தாவிப் பாய்வதற் கான உலோக மின்வாய்கள்.

Spatula: தட்டலகுக் கரண்டி: வண்ணங்களைக் குழைக்கப் பயன்படும் நெகிழ்வான அலகுடைய கத்திபோன்ற கரண்டி.

Specification: தனிக்குறிப்பீடு: தனித்தனி விவரக் குறிப்பீடு,

Specific cravity: (இயற்.) ஒப்பு அடர்த்தி: ஒரு பொருளின் வீத எடைமானம். திடப் பொருள்களையும், திரவங்களையும். நீருடனும், வாயுக்களைக் காற்றுடனும் ஒப்பிட்டு அடர்த்தி கணக்கிடப்படுகிறது.

Specific heat: வீத வெப்பமானம்: குறிப்பிட்ட அளவை ஒரு பாகை வெப்பத்திற்கு உயர்த்துவதற்கான வெப்ப அளவை நீரொப்பீட்டெண் .

Specimen bar: (பொறி.) மாதிரி உலோகச் சலாகை: சோதனை எந்திரத்தில் சோதனை செய்வதற்காகத் தனியாகத் தயாரிக்கப்பட்ட மாதிரி உலோகச் சலாகை.