பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



Sph

548

Spi


பரப்பு : விட்டத்தின் இருமடி

X 3.1418 கனஅளவு : விட்டத்தின்

மும்மடி x 0.5236

Spheroid : நெட்டுருளை : நீள்வட்டச் சுழற்சி வடிவம்.

Sphero meter : நுண்விட்டமானிமானி.

Spider gears : (தானி.) சிலந்திப் பல்லிணை : சிலந்தி வலைப் பின்னல் போன்று அமைக்கப்பட்ட இரண்டு, மூன்று, நான்கு பல்லிணை அமைப்புகள். இதன் மூலம், பின் இருசில் வேறுபட்ட செயல் முறைகள் பெறப்படுகின்றன.

Spiegeleisen : (வேதி.) கன்ம வார்பபிரும்பு : கன்மம் அடங்கிய வார்ப்பிரும்பு. இதில் அதிக அளவு கார்பனும், மாங்கனீசும் அடங்கியிருக்கும். மாங்கனீசின் அளவு 19-20 சதவீதத்திற்கு மிகைப்படும்போது, அது அய மாங்கனிஸ் எனப்படும்.

Spigot : (கம்.) மூடுகுமிழ் : ஒரு குமிழுக்குள் பொருந்தக்கூடிய ஒரு குழாய்முனை.

Spike (க.க.) தடியாணி : தடித்த பெரிய ஆணி.

Spile : (பொறி.) முளைத்தடி : நிலத்தில் அடித்திறக்குவதற்கான பெரிய வெட்டு மரம்.

Spin (வானூ.) சுழல் இறக்கம் :

விமானம் சுழன்று கொண்டே தலைகீழாக இறங்கும் இறக்கம்.

Spindle : நூற்புக் கதிர் : நுனியில் கூம்பிச் செல்லும் கழிசுற்று நூற் கோல்.

Spinet : 16-18ஆம் நூற்றாண்டுகளிலிருந்து பயன்படுத்தப்படும் விரல்கட்டை உடைய இறகு வடிவ நரம்பிசைக் கருவி.

Spinning lathe: (உலோ.வே.) சுழல் கடைசல் எந்திரம்: உலோகத் தகடுகளில் வேலைப்பாடுகள் செய்வதற்குப் பயன்படும் சுழலும் கடைசல் எந்திரம்.

Spiral: திருகு சுருள்: திருகு சுருளாகச் செல்கிற சுருள் வட்ட வளைவு.

விமானம் திருகு சுருளாகக் கீழாக இறங்குதல்.

Spiral balance: சுருள்வில் எடைக்கோல்: சுருள்வில்லின் முறுக்கினால் நிறையளக்கும் துலாக்கோல்.

Spiral coupling: (எந்.) திருகு சுருள் இணைப்பு: ஒரு திசையில் மட்டுமே சுழற்றும்போது இணைந்து கொள்ளும் அமைப்புடைய தாடை இணைப்பு.

Spiral gear: (பல்.) திருகு சுருள் பல்லிணை: திருகுசுழல் வட்டத்தின் ஒரு பகுதியாகப் பல் அமைந் துள்ள பல்லிணை. இதனைத் 'திருகுப் பல்லிணை’ என்றும் அழைப்பர்.