பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Spiral instability: (வானூ.) சுழல் உறுதியின்மை: சில வகை விமானங்களில் வழித்தடுமாற்றம் காரணமாக ஏற்படும் உறுதியின்மை,

Spiral spring: (எந்.) சுழல் விற்சுருள்: கடிகாரம் அல்லது கைக்கடிகாரங்களில் உள்ளது போன்ற சுழல் விற்கருள் .

Spiral wheel:சுழல் சக்கரம்: ஊடச்சுக்குக் குறிப்பிட்ட கோணத்தில் வெட்டப்பட்ட பற்களையுடைய சக்கரம்.

Spire: (க.க.) தூபி முனை: கூம்பு வடிவக் கோபுரம்.

Spirit level: (க.க.) குமிழி மட்டம்: கிடைமட்டத்தையும், செங்குத்து மட்டத்தையும் துல்லியமாக அளவிடுவதற்குப் பயன்படும் கருவி. இதில் ஒரு மர அல்லது உலோகப் பெட்டியில் வெறியம் ஏறத்தாழ முழுமையாக நிரப்பப்பட்டிருக்கும். குமிழி மையத்தில் நிலைகொண்டு நிற்குமானால், மட்டம் சரியாக இருக்கிறது என்பதைக் குறிக்கும்,

Spirit varnish: (மர.வே.) வெறிய மெருகெண்ணெய்: கற்ப்பூரத் தைலம், ஆல்ககால் போன்ற விரைந்து ஆவியாகக்கூடிய கரைமங்கள் அடங்கிய மெருகெண் ணெய்,

Splash lubrication: (தானி.)தெறிப்பு மசகு: மசகுப் பொருளை வாரித் தெரித்து மசகிடும் முறை.

Spl

549

Spl


Splay : (க.க.) தளச்சாய்வுக் கோட்டம் : கதவு, பலகணி முதலியவற்றில் விளிம்பு புறக் கோட்டச் சாய்வு.

Splice : (மின்.) புரியிணைவு: மின்கடத்திகளை முறுக்கிப் புரியிணைவு செய்து ஒன்றுபடுத்துதல்.

Spline : இணையாப்பு : ஊடச்சுடனும் சக்கரத்துடனும் இழைந்து சென்று அவை தனித்து உருளாது இணைந்து உருளச் செய்யும் ஆப்பமைவு.

Split field : (மின்.) பிளவுப் புலம் : இரு துருவப் புலம் பொதிவு உடைய மின்னாக்கி. இதில் ஒரு புலம் ஒரு புலம் ஒரு மூன்றாம் துாரிகையுடனும், மற்றொரு புலம் முதன்மைத் துாரிகையுடனும் இணைக்கப்பட்டிருக்கும். இந்த வகை மின்னாக்கியில் மூன்றாம் தூரிகையின் மின்னோட்டக் கட்டுப்பாட்டு அம்சங்கள் நிலைத்திருக்கும்.

Split gear : (பல்)பிளவுப் பல்லினை : இரு பிளவாகச் செய்யப்பட்ட பற்சக்கரம்.

Split nut : (எந்.) பிளவு மறையாணி : நீளவாக்கில் பிளவுடைய ஒரு மரையாணி. இது திருகில் நழுவிச் சென்று விரைவாக நகர்வதற்கு உதவுகிறது. இது பெரும்பாலும் விற்கருள் விட்டமானியில் பயன்படுத்தப் படுகிறது.

Split phase: (எந்.) பிளவு மின்னோட்டப் படிநிலை: ஒரே மாற்று