பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Spl

550

Spo


மின்னோட்டப் படிநிலை மின்னியக்க விசையுடன் இணைக்கப்பட்டுள்ள பல்வேறு மின் சுற்று வழிகளில் வேறுபட்ட மாற்று மின்னோட்ட இயக்கப் படிநிலைகளை உண்டாக்கும் மின்னோட்டங்கள்.

Split pulley: (எந்.) பிளவுக் கப்பி: இரு பாதிகளாக அமைக்கப்பட்டு மரையாணியால் பிணைக்கப்பட்டுள்ள கப்பி.

Split ring: (எந்.) பிளவு வளையம்:ஒர் உந்து தண்டிலுள்ள பலகூற்று வளையம்.

Split wheel: பிளவுச் சக்கரம்: இரு பிளவாகச் செய்யப்பட்ட சக்கரம்.

Spoke: (எந்.) ஆரை: சக்கரத்தின் குறுக்குக்கை. குடத்துடன் வெளிவிளிம்பை இணைக்கும் கரம்.

Spoking machine:சாய்வு எந்திரம்: பழுக்களுககு ஒத்த சாய்வு வழங்க உதவும் எந்திரம்.

Sponginess: (வார்.) நிறை உள்துளை உடைமை: உலோகங்களின் செறிவற்ற தன்மை.

Sponson: (வானூ.) புற உந்து தளம்: கப்பலில் தள த்தின் புறத்தே உந்தும் பகுதி.

Spontaneous combustion:தன்னக உள்ளெரிதல் : தன்னிடத்திலேயே எழும் வெப்பத்தினால் தீப்பற்றி கொள்ளும் இயல்பு.

Spoon bit: கரண்டித் தமரூசி: கூர்மையான முனைகளுடன் பிறை

வடிவத்திலுள்ள துளையிடுவதற்கான தமருசி. இது காகிதம், அட்டைகள் போன்றவற்றில் துளையிடுவத ற்குப் பயன்படுகிறது.

Sport roadster: (தானி.) பந்தய ஊர்தி: இது சாதாரண உந்து ஊர்தி போன்றது. இதன் பின்புறத் தள அடுக்கு மட்டும் சாமான்கள் வைப்பதற்கான இடமாக இல்லாமல், பின் இருக்கையாக அமைந்திருக்கும்.

Spot : ஒளிப்புள்ளி : தொலைக் காட்சியில் ஒளிக் கற்றையானது இடமிருந்து வலமாக ஒரு கோட்டினை அல்லது உருக்காட்சியை அலகிடும்போது, எதிர்மின் கதிர் படக் குழாயின் ஒளியுமிழ் திரையின் மீது எலெக்ட்ரான் கற்றையினால் உண்டாக்கப்படும் ஒளி.

Spotting tool: (எந்.) குறி காட்டுக் கருவி: இதனை 'மையங் காட்டும் மற்றும் முகப்புக் காட்டும் கருவி' என்றும் கூறுவர். இது எந்திரப் பகுதிகளின் அடிக்கட்டையின் முனையில் மையத்தை அல்லது முகப்பினைக் குறிப்பதற்குப் பயன்படுகிறது.

Spout : (வார்.) கொண்டிவாய்க் குழாய் : இரும்பு வார்ப்படத் தொழிற்சாலை அடுப்பிலிருந்து கட்டுவதற்கு திரவ உலோகம் பாய்வதற்கான கொண்டிவாய்க் குழாய்.

Spraying liquid: (தானி.) தெளிப்புத் திரவம் : எண்ணெய்கள் துப்புரவுத் திரவங்கள், வண்ணங்கள்