பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Staple: தைப்பு முள்: மரத்தினுள் செலுத்துவதற்கான கூர்மையான நுனிகளுடைய U-வடிவக் கம்பி அல்லது இரும்புத் துண்டு.

Star connection: (மின்.) மும்முனை இணைப்பு: மூன்று நிலை மின்னாக்கிகளிலும், மின்மாற்றிகளிலும் மூன்று சுருள்கள் உண்டு. இவை முக்கிளை, Y, டெல்ட்டா எனப்படும். ஒவ்வொரு சுருளின் ஒரு முனையானது ஒன்றாக இணைக்கப்பட்டு மற்ற மூன்று முனைகளும் தனித்தனியாகப் பிரிக்கப்படும்போது அது முக்கிளை இணைப்பு அல்லது Y-இணைப்பு எனப்படும்.

Star drill: முக்கிளைத் துரப்பணம்: கல்லில் அல்லது கட்டுமானத்தில் துரப்பணம் செய்வதற்குப் பயன் படும் நட்சத்திர வடிவ முனை கொண்ட ஒரு கருவி.

Starling: (க.க.) திண்டுவரி: காலத்தின் திண்டைச் சுற்றிப் பாதுகாப்பிற்காக இடும் பெருந்துாண் தொகுதி.

Starter: (தானி.மின்.) தொடக்கி: எந்திர இயக்கத்தைத் தொடங்கி வைக்கிற அமைவு.

Starting circuit: (தானி.) தொடக்க மின்சுற்று வழி: தொடக்க விசையை நிறுத்தியவுடன் நேர் மின் முனையிலிருந்து மின்விசைக்கும் தொடக்க மின்னோடிக் களச் சுருணைக்கும். மின்னகத்திற்கும், மின் தொடு விசைக்கும் பாய்கிறது. அது பின்னர் மின்கலத்தின் எதிர் மின்முனைக்கு வருகிறது.

Sta

555

Sta


Starting motor : (தானி.) தொடக்க மின்னோடி : மின்சுற்று வழியை மூடுவதன் மூலம் எஞ்சினைத் திருப்புவதற்குப் பயன்படும் மின்னோடி.

Starting newel: (க.க.) தொடக்க நடுத் தூண் : ஒரு படிக்கட்டின் அடியில் கைப்பிடிச் சுவரைத்தாங்கி நிற்கும் தூண்.

Starting torque : (மின்.) தொடக்கு திருக்கை : மின்னோட்டத்தின் தொடக்க நிலையில் ஏற்படும் மின்காந்த விளைவின் மூலமாகத் தனது சுழல் தண்டின் மீது ஒரு மின்னோடி உண்டாக்கும் திருப்பு விளைவு.

Startix : (தானி.) மின்கம்பிச் சுருள் உருளை : சுடர்மூட்ட விசையைப் போட்டதும் தொடக்க மின் னோடி விசையைக் தானாகவே மூடிவிடும் மின்கம்பிச் சுருள் உருளை .

Static ataxia : தடுமாறு நிலை : விழாமலோ தடுமாறாமலோ நிற்க முடியாத நிலை.

Static balance:நிலைச் சமநிலை : ஒரு கப்பித் தொகுதியின் அல்லது சுழல் தண்டின் எடையானது சமச் சீராகப் பரப்பப்பட்டிருக்கும்போது உள்ள சமநிலை.

Static balanced: (வானூ.) நிலைச் சமநிலைப் பரப்பு: பொருண்மையின் மையமானது. நீல் அச்சில் அ மைந்துள்ள கட்டுப்பாட்டுப் பரப்பு.