பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Sta

556

Sta


Static ceiling: (வானூ.) நிலை முகடு : திட்ட அளவு வாயு மண்டலத்தில் அகற்றக்கூடிய எடைகள் அனைத்தையும் அகற்றிய பிறகு, வான் கலம் நிலைச் சமநிலையில் இருக்கும் உயரம்.

Static electricity : நிலையியல் மின்னாற்றல்: இயக்காத நிலையிலுள்ள மின்னாற்றல். இது ஓட்ட மின்னாற்றலிலிருந்து வேறுபட்டது. இது உராய்வுத் தொடர்பு மூலம் உண்டாக்கப்படுகிறது. பட்டுத் துணியில் அல்லது கம்பளித் துணியில் ஒரு கண்ணாடிக் கோலைத் தேய்ப்பதால் உண்டாகும் மின்னாற்றல் இதற்குச் சான்று.

Static friction: நிலையியல் உராய்வு: இரு பொருள்கள் ஒன்றை விட்டு ஒன்று விலகிச் செல்லும் போக்கில், ஆனால் உண்மையில் விலகிச் செல்லா திருக்கிற நிலையில் அவற்றுக்கிடையிலுள்ள உராய்வு.

Static load: நிலையியல் சுமை: அசையா நிலையிலுள்ள சுமை அல்லது எடை .

Statical electricity: நிலையியல் மின்னாற்றல்.

Statical pressure: நிலையியல் அழுத்தம்.

Statics: நிலையியல்: இயங்கா நிலையமைதி அல்லது சமநிலையமைதி கொண்ட பொருள்களின் தன்மைகளை ஆராயும் இயற்பியலின் பகுதி.

Static stability: நிலையியல் உறு

திப் பாடு: விமானம் தனது வழக்கமான உயரத்தில் அச்சிலிருந்து தமது ஈர்ப்பு மையத்தின் மூலம் சற்றே சாய்ந்திடும்போது, அது முதலிலிருந்த உயரத்திற்குத் திரும்பி வருவதற்குரிய உறுதிப் பாட்டு நிலை.

Static thrust: நிலையியல் உந்துகை: விமானத்தில் ஒரு சுழலி திசையியக்கமின்றிச் சுழலும்போது உண்டாகும் உந்து ஆற்றல்.

Stationary engine: நிலை எஞ்சின்: நிலையான அடித்தளத்தின் மீது பொருத்தப்பட்டுள்ள ஓர் எஞ்சின் . இது இடம்விட்டு இடம் கொண்டு செல்லும் எஞ்சினிலிருந்து வேறுபட்டது.

Statistics: புள்ளியியல் : புள்ளி விவரங்களைத் தொகுக்கும் அறிவியல்.

Stator: (மின்.) உந்து மின்கல நிலைக்கூறு மின்னாற்றல் பிறப்பிக்கும் பொறியில் அசையா திருக்கும் பகுதி.

Stator armature: சுழல்விலா உங்து மின்கலம்.

Statoscope: நீரில்லாத நுண்ணழுத்தமானி: விமானம் பறக்கும் உயரத்தின நுட்ப வேறுபாடுகளையும் காட்டும் நீரில்லாத காற்றழுத்தமானி.

Stay bolt: அண்டைக்கட்டு: எந்திர அண்டைகட்டு.

Steady rest : (எந்.) உறுதி