பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆதாரம் : நீண்ட, நுண்ணிய பொருள்கள் மீது கடைசல் வேலைப்பாடுகள் செய்யும்போது, அதைத் தாங்குவதற்கு இருவழிகளிலும் பொருத்தப்பட்டுள்ள உதைகால்.

Steam : நீராவி: நீரைக் கொதிக்க வைப்பதால் உண்டாகும் ஆவி.

Steam boat : நீராவிப்படகு : நீராவியால் இயங்கும் படகு.

Steam boiler :நீராவி கொதி கலம்: எந்திர நீராவிக் கொதி கலம்.

Steam - box : நீராவிக் கொள் கலம் : கொதி கலத்திலிருந்து இயக்குருளைக்கு நீராவி செல்லும இடையிலுள்ள கொள்கலம்.

Steam bronze : (உலோ.) நீராவி வெண்கலம் : ஒரதர்களும், பொருத்து கருவிகளும் தயாரிக்கப் பயன்படும் உலோகக் கலவை. இதில் 85% செம்பு, 5% துத்தநாகம், 5% ஈயம், 5% வெள்ளீயம் அடங்கியுள்ளது.

Steam gun : நீராவித் துப்பாக்கி :நீராவியால் இயக்கப் பெறும் துப்பாக்கி,

Steam hammer : நீராவிச் சம்மட்டி : நீராவி அழுத்தத்தினால் மேலும் கீழும் இயங்கும் சம்மட்டி,

Steam cylinder : நீராவி இயக்கு நிலை : நீராவிப் பொறியின் இயக்குருளை.

Steam engine : நீராவி எந்திரம்: நீராவி விசையாக் கப் பொறி.

Ste

557

Ste


Steamer நீராவிக் கப்பல் : நீராவியால் இயங்கும் கப்பல்.

Steam gas : வெப்ப நீராவி : பெருமளவு சூடேற்றப்பட்ட நீராவி:

Steam guage : நீராவி அழுத்த மாணி : நீராவியின் அழுத்த நிலையை அளவிடப் பயன்படும் கருவி.

Steam heat : நீராவி ஆக்க வெபபம் : வெப்பமூட்டும் பொறியில் நீராவி வெளியிடும் வெப்பத்தின் அளவு

Steaminess : நீராவி பதிவு நிலை : நீராவி நிரம்பிய நிலை.

Steam jacket :நீராவிச் சட்டை: நீராவி இடை வழி ஊடு சென்று வெப்பமூட்டும்படி அமைக்கப்பட்ட எந்திர இயக்குருளையின் புறத்தோடு,

Steam main : நீராவி முதன்மைக் குழாய் : கொதிகலத்திலிருந்து எஞ்சின்களுக்கு நீராவியைக் கொண்டு செல்லும் கிடைமட்டத்திலுள்ள குழாய்.

Steam packet : நீராவிக்கலம் : சில துறைமுகங்களிடையே மட்டுமே இயங்கும் நீராவிக்கலம்.

Steam power : நீராவி ஆற்றல்.

Steam roller : அமைப்புப் பொறியுருளை,

Steam table : நீராவி மேசை : பாள அச்சு அட்டைத் தகட்டு அச்சடிப்பு முறையில் பயன்படுத்தப்