பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



Ste

558

Ste


படும் அச்சு வார்ப்புரு அட்டைகளை உலர வைப்பதற்கான மேசை

steam turbine : (பொறி.) நீராவி விசையாழி : நீராவி ஓர் உந்து தண்டின் மீது செயற்படுவதற்குப் பதிலாக ஒரு சுழலும் விசையாழியின் மீது செயற்படுகிற நீராவி எஞ்சின்.

Steel : (உலோ.). எஃகு : 1.7% வரை கார்பன் கொண்ட இரும்பின் ஒரு வடிவம். இதில் குறைந்த அளவு கார்பன் உள்ள நெகிழ் திறனற்ற எஃகு, அதிக அளவு கார்பன் அடங்கிய நெகிழ் திறன் மிகுந்த எஃகு ஆகியவை அடங்கும்.

Steel alloys: (பொறி.) எஃகு உலோகக் கலவைகள : சில தனி நோக்கங்களுக்காகத் தயாரிக்கப் படும் சிறப்பு எஃகு வகைகள். இவற்றில் வலிமைக்காக மாங்கனீஸ், விறைப்புத் திறனுக்காக நிக்கல். வெப்பத் தடைக்காக டங்ஸ்டன், அதிர்ச்சியைத் தாங்குவதற்காக குரோமியம், நலிவடையாதிருக்க வனேடியன் போன்ற பொருள்கள் சேர்க்கப்படுகின்றன.

Steel belt : (எந்.) எஃகுப் பட்டை : 0.008" முதல் 0 0.35" வரைக்கனமும், 7/8" முதல் 8" வரை அகலமும் உடைய மெல்லிய, தட்டையான எஃகுப் பட்டைகள், இந்தப் பட்டைகள் நிமிடத்தில் 10,000 அடி வேகத்தில் ஓடக்கூடியவை


Steel casting: (பொறி.) எஃகு வார்ப்படம்: அதிர்ச்சிக்கு உள்ளாகக் கூடிய எந்திர உறுப்புகள் செய் வதற்கான எஃகு வார்ப்படம்.

Steel converter. (பொறி)எஃகுத் திரிகலம் : தேனிரும்பை எஃகாக மாற்றுவதற்குப் பயன்படும், உயர் வெப்பம் ஏற்கும் பொருள் பூசிய கொள்கலம்.

Steel engraving : (அச்சு.) எஃகுச் செதுக்கு வேலைப்பாடு : எஃகுத் தகட்டில் கலைச்செதுக்கு வேலைப்பாடுகள் செய்தல்.

எஃகு செதுக்கு வடிவமைப்புகள் செய்தல்.

செதுக்கு எஃகுத் தகட்டிலிருந்து படங்களை அச்சடித்தல்.

Steel girder: (பொறி.) எஃகுத் தூலம்: தூலமாகப் பயன்படும் இரும்புப் பாளம்; பாலங்களுக்கும் மோடுகளுக்கும் ஆதாரமான எஃகுக் கட்டுமானச் சட்டம்.

Steel pulley: (எந்.) எஃகுக் கப்பி : எஃகினாலான கப்பித் தொகுதி, எடை குறைவாக இருப்பதற்காகவும், எளிதாக இயக்குவதற்காகவும் இது பயன்படுத்தப்படுகிறது.

Steel rule:(எந்.)எஃகு வரைகோல்: நெகிழ் திறனுடைய அல்லது விறைப்பான எஃகு வரைகோல். இதில் பல்வேறு அளவுகள் குறிக்கப்பட்டிருக்கும். இந்த அளவுகள் அங்குலங்களிலும், அங்குலங்களின் பின்னங்களிலும் அமைந்திருக்கும்