பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Steel square: எஃகுச் செங்கோணளவி: எந்திர நுட்பப் பணியாளர்கள் பயன்படுத்தும் எஃகினாலான மூலை நுட்பப்பலகை,

Steel wool:(பட்.)எஃகு இழை : பாய் போல் முடையப்பட்ட நுண்ணிய எஃகு இழைகள். இது மர அல்லது உலோகப் பரப்புகளை பளபளப்பாக்குவதற்குப் பயன்படுகிறது.

Steelyard: தராசுப்பொறி: எடை பார்ப்பதற்குப் பயன்படும் ஒரு வகைத் தராகப்பொறி. இதில் சமமற்ற நீளமுடைய இரு கரங்கள் ஒரு நீண்ட நெம்புகோலுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

Steeple:(க.க.)ஊசிக்கோபுரம்: தேவாலயங்களில் உள்ளது போன்ற கூம்பு வடிவக் கோபுரக் கூம்பு.

Steeple jack: தூபி பழுது பார்ப்பவர்:தூபி முகடேறிப் பழுதுபார்ப் பவர்.

Steering column: இயக்குத் தூண்: உந்துகல இயக்காழி பொருத்தப்பட்டிருக்கும் தூண் அல்லது கம்பம். இது, வழிச்செலுத்து இயக்கத்தை முன் சக்கரங்களுக்குக் கொண்டு செல்லும் பல்வேறு உறுப்புகளுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

Steering gear:(தானி.எந்)இயக்கு பல்லிணை:உந்துகல இயக்காழியை இருசுடன் இணைக்கும் உறுப்புகளின் தொகுதி அனைத்தையும் இது குறிக்கும். இதன் மூலமாகவே

Ste

559

Ste


உந்து ஊர்தியைச் செலுத்த முடிகிறது.

Steering wheel: (தானி.) உந்துகல இயக்காழி: உந்து ஊர்தியின் முன் சக்கரங்களுடன் பல்வேறு பல்லிணைகள், நெம்புகோல்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ள கையினால் இயக்கக்கூடிய சக் கரம். இதன் மூலமாகவே உந்து ஊர்தியின் இயக்கத்தைக் கட்டுப்படுத்த முடிகிறது.

Stellite: (பொறி.) ஸ்டெல்லைட் : குரோமியத்தையும், கோபால்டையும் பெருமளவிலும், சி றிதளவு மாலிப்டினத்தை அல்லது டங்ஸ்டைனையும் கொண்ட ஒருவகை உலோகக் கலவை. இது கருவி களும், வெட்டுக் கருவிகளும் தயாரிக்கப் பயன்படுகிறது. இதனை வார்ப்படமாகச் செய்யலாம்; ஆனால், காய்ச்சி அடித்து உருவாக்க இயலாது. இதனை அராவித் தீட்டலாம்.

Stencil: படியெடு தாள் : எழுத்துகளை அல்லது ஒப்பனை உருக்களை உள்வெட்டுத் தகட்டுப் படி யெடுத்துப் படியெடுப்பதற்கான உலோகம் அல்லது பிற பொருள்களினாலான மெல்லிய தகடு.

Step down transformer:(மின்) குறைப்பு மின்மாற்றி: மின்வழி மின்னோட்ட அளவை அல்லது மின் னழுத்த அளவைக் குறைந்த அளவுக்கு மாற்றுகிற மின்மாற்றி.

Stepping round: (எந்.) வளை வரைப்பகுப்பு: வில், வளைகோடு அல்