பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



Ste

560

Sti


லது வட்டத்தைக் கவராயத்தின் மூலம் பல பகுதிகளாகப் பகுக்கும் முறை. பல்லிணைச் சக்கரத்தை உருவாக்குவதில் இந்த முறை பயன்படுகிறது.

Stereography : திட்பக் காட்சி அமைவு முறை .

Stereoscope: திட்ப காட்சிக்கு அமைவு முறை : இரு கண்ணாலும் இருகோண நிலைப்படங்கள் காணப்படுவதன் மூலம் மொத்தத் திட்பக்காட்சி தோற்றுவிக்கும் கருவி.

Stereophonic:பல திசைத் தொனி: ஒலிவகையில் பல திசைகளிலிருந்து வருவது போலமைந்த தொனி யமைப்பு முறை. இந்த முறையில் உண்டாகும் தொனியில் ஆழமும், அழுத்தமும், செழுமையும் ஏற்படு கிறது.

Stereopsis:இருவழி இயைகோணக்காட்சி: இருவிழி இருகோண நிலைப் படக் காட்சியமைவு முறை.

Stereotype: (அச்சு.) பாள அச்சு அட்டைத் தகடு : உருவச்சில் அடித்த பகுதியைப் பாளமாக அட்டை முதலிய படிவுப் பொருள்களில் எடுத்து மறு அச்சிற்குப் பயன்படுத்தப்படும் தகடு.

Stereotyping : (அச்சு.) பாள அச்சுப் பதிவுமுறை: பாள அச்சு முறையில் அச்சடித்தல். இதில் வெப்பமுறை பொதுவாகப் பெருமளவில் பயன்படுகிறது.

Sterling:ஸ்டர்லிங் வெள்ளி:வெள்ளியின் தூய்மைத் தரத்தைக் குறிக்கும் ஒர் அளவுத் திட்டமுறை

9251000 பகுதி நேர்த்தியான வெள்ளியும் 75 1000 பகுதி செம்பும் அடங்கியது ஸ்டர்லிங் வெள்ளியா கும். அணிகலனின் "ஸ்டர்லிங்’ என்ற முத்திரை இருக்குமாயின் அது அதன் தரத்திற்கு உத்தரவாத மாகும்.

Stet: (அச்சு.) மூலப்படி விடுக : அச்சுப் பணியில் பிழை திருத்துவோர் பயன்படுத்தும் சொல். அச்சுப்படியில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தால், அடித்ததை அடியா நிலையில் 'முன்போல் நிற்க' 'விட்டு விடுக' என்று பொருள்படும்.

Stick: (அச்சு.) அச்சுக் கோப்புக் கட்டை: அச்சுக் கோப்பவர்கள் அச்சு எழுத்துகளைக் கோத்து அடுக்குவதற்குப் பயன்படும் சிறிய கைச்சட்டகம்.

Stickful: (அச்சு.) அச்சுக்கோப்புக் கட்டை நிறைவு அளவு: அச்சுக் கோப்புக் கட்டையில் அச்சு எழுத்துகளை முழுவதுமாகக் கோத்து நிறைவு செய்துள்ள நிலை.

Sticking of valves:(தானி;மின்.) ஒரதர் அடைப்பு: மசகுக் குறைவினாலும் கார்பன் படிவதாலும் ஒரதர்கள் முறையாகத் திறக்கவும் மூடவும் முடியாமல் அடைத்துக் கொள்ளுதல் .