பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Stick shellac: குச்சி அவலரக்கு: மெருகூட்டுவதற்குப் பயன்படும் குச்சி வடிவ அவலரக்கு. இது வெடிப்புகள், கீறல்கள் முதலியவற்றை அடைப்பதற்குப் பயன்படுகிறது.

Stiffener: (பொறி.) விறைப்பாக்கும் பொருள்: விறைப்புத் தன்மையை அதிகரிப்பதற்காக ஒர் உறுப் புடன் பிணைக்கப்படும் கணுக்கால், தகடு அல்லது பிற வடிவப் பொருள்.

Stile: (க.க) கடவேணி: சுவரின் அல்லது வேலியின் மீது ஒரு புறம் ஏறி மறுபுறம் இறங்குவதற்கான படி அல்லது படிக்கட்டுகளின் தொகுதி.

Stillson wrench: (கம்)ஸ்டில்சன் திருக்குக் குறடு: குழாய்களைத் திருக்குவதற்குச் சாதாரணமாகப் பயன்படும் குறடு. இதனைக் கண்டு பிடித்த ஸ்டில்சன் பெயரால் இது அழைக்கப்படுகிறது.

Stipple: புள்ளி ஒவியம்: கோடுகளுக்குப் பதிலாகப் புள்ளிகளிட்டுப் படம் வரைதல் அல்லது செதுக்கு வேலைப்பாடு செய்தல்.

Stipple-graver: செதுக்கோவியர் புள்ளியிடு கருவி: செதுக்கோவியர்கள் புள்ளிகளிட்ட வேலைப்பாட் டுக்காகப் புள்ளியிடுவதற்குப் பயன்படுத்தும் கருவி.

Stippler:புள்ளிமுறை ஓவியம்:

47

Sti

561

Sto


புள்ளிகளால் படம் வரையும் முறை.

Stirrup: (பொறி.) அங்கவடி: உத்திரம் சலாகை, கதிர் போன்றவற்றுக்கு ஆதாரப் பிடிப்பாகவுள்ள ஒரு பட்டை அல்லது வளையம்.

Stirrup-pump: தீயணைப்பு மிதிப் பொறி:

Stitch-wheel:தைப்புச் சக்கரம்: துளை போடுவதற்கான சேணம் தைப்பவரின் வெட்டு வாய்ச் சக்கரம்.

Stoa: (க.க.) சிற்ப வாயில்: சிற்ப வேலைப்பாடுடைய வாயில் முகப்பு நுழைமாடம், முக மண்டபம்.

Stone: ஸ்டோன் : 6350 கி.கி.எடை

Stone blue : வெளிறு நீலம் : வெண்மை கலந்த அவுரி நீலம்,

Stone-butter: படிக்காரம்: படிக்காரத்தின் ஒருவகை.

Stone-pitch: கெட்டிக்கீல்: கெட்டியான கீல் வகை.

Stone-saw: கல் இரம்பம்: மணல் உதவியோடு கல் அறுக்க உதவும் பல் இல்லா இரும்பு இரம்பம்.

Stool. (க.க.) ஓரச்சட்டம்: பலகணி ஓரச் சட்டம்,

Stoop: (க.க.) வாயிற்குறடு: வீட்டின் வாயிலில் உள்ள படிவாயில்