பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இணைத்துக் காட்டப்படும் வட்டுருளை அடையாளம்.

Storm sash : (க.க.) புறப் பலகணிச் சட்டம் : கடுங்குளிர்ப் பருவத்தில் பாதுகாப்புக்காகப் பயன் படுத்தப்படும் மிகையான அல்லது புறப் பலகணிச் சட்டம்.

Storm signal : புயல் எச்சரிக்கைச் சைகை : புயல் வருவதை முன்னரே அறிவிக்கும் அடையாளம்.

Stove bolt : கணப்பு மரையாணி: கரையில்லாத மரையாணி, எந்திரத் திருகாணி எனப்படும். கரையுடன் கூடிய மரையாணி கணப்பு மரையாணி எனப்படும். கணப்பு மரையாணிகள் பொதுவாக எந்திரத் திருகாணிகளை விடச் சற்று சொர சொரப்பான புரியிழையினைக் கொண்டிருக்கும்.

Stove.pipe : கணப்புப் புகைசெல் குழாய் : கணப்படுப்புப் புகை செல்வதற்குரிய குழாய்.

Straddle milling : (எந்.)கவட்டு துளையிடு கருவி : உலோகத் தகடுகளில் துளைகளிடுவதற்கும் பள்ளம் வெட்டுவதற்கும் பயன்படும் கவடு போன்ற வெட்டுக்கருவிகள் கொண்ட கருவி.

Straight-edge : (எந்.) நேர் நுட்பக்கோல் : ஆய்வியல் முறையில் நேர் நுட்பமான ஒரு புறம் கொண்ட அளவு கோல்.

Straight-eight engine: (தானி.)

Str

563

Str


எண்வட்டு உந்துகலம் : வரிசையாக எட்டு நீள் உருளைகளைக் கொண்ட உந்து ஊர்தி,

Straight jet: பீற்று விமானம்: சுழல் விசிறியற்ற பீற்று விமானம்

Strain : (பொறி.) இழுவிசை : உரிய வரம்புக்கு அப்பால் நெட்டிழுத்தல். வடிவம் அல்லது கன அளவில் மாறுதல் ஏற்படும் அளவுக்கு எல்லை கடந்து வலிந்து இழுத்தல்.

Straining - beam : இடைக் கூம்பு விட்டம் : மோட்டு விட்டக்கூம்பின் இரு நிமிர் கால்களை இணைக் கின்ற கிடைமட்ட உத்தரம்.

Strake:(உலோ.வே.)நீர்வரிப்பட்டி: கப்பலின் முன் பகுதியிலிருந்து பின் பகுதி வரையுள்ள தொடர்ச்சியான பலகை அல்லது தகட்டு அடைப்பு.

Stranded wires : (மின்.) சரக் கம்பி ; பின்னிய அல்லது முறுக்கிய பல சிறு கம்பிகளைக் கொண்ட கம்பிச்சரடு அல்லது கம்பி வடம்.

Strap work :வார் ஒப்பனை : வார்முடைவுப் போலி அணி ஒப்பனை.

Strata : படுகைகள்: இயற்கையான அல்லது செயற்கையான நில அடுக்குப் படுகைகள்.

Stratification : அடுக்கமைவு : அடுக்கடுக்கான படுகைகளாக அமைதல்.