பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

393

இழுத்து நீட்டத்தக்கது. தகடாகத்தக்கது வீத எடைமானம் 11.84; உருகுநிலை 327°C நைட்ரிக் அமிலத்தில் கரையக் கூடியது. பொதுவாக, கந்தகத்துடன் கலந்து ஈயச்சல்பைடு ஒர் காலினா என்ற தாதுவாகக் கிடைக்கிறது. தூய்மையாகவும், கூட்டுப்பொருளாகவும் பல்வேறு வகையில் பயன்படுகிறது.

Lead burning; (தானி.)ஈயப்பற்ற வைப்பு : ஈயத்தைப் பயன்படுத்திப் பற்றவைத்தல் சேமக்கலங்களில் முக்கியமாகப் பயன்படுகிறது.

Lead cutter: (அச்சு.) ஈய வெட்டுச் சாதனம்: ஈயத்தை வேண்டிய வடிவ ளவுகளில் வெட்டுவதற்குக் கையினால் இயக்கப்படும் ஒரு கருவி.

Leaded mater: (அச்சு.) ஈயஇடை வெளி: அச்சுப்பணியில் வரிகளுக் கிடையே ஈய இடைவரிக்கட்டைகள் இடப்பட்டு அமைக்கப்பட்ட அச்செழுத்துகள்.

Leader: இணைப்புத் திரைப்படச் சுருள்: திரைப்பட ஒளியுருப்படிவுக் கருவியில் இணைத்துத் தொடர்பு படுத்துவதற்குத் திரைப்படச் சுருளின் இரு முனையிலும் பயன்படுத்தப்படும் வெற்றுத் திரைப்படச் சுருள்.

Leaders: (அச்சு). வழி காட்டு வரை: விழிக்கு வழிகாட்டும் புள்ளி களால் அல்லது கோடுகளாலா வரை.

Lead hammer: (எந்.) ஈயச் சுத்தியல்: ஈயத்தாலான கொண்டையுடைய ஒரு சுத்தியல் உறுப்பு களில் சிராய்வு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக எஃகுச் சுத்தியலுக்குப் பதிலாகப் பயன்படுத்தப் படுகிறது.

Lead hole: (எந்.) முந்து துவாரம்: ஒருபெரியதுவாரத்தைத் துரப்பணம் செய்வதற்கு அல்லது ஒரு சாய்வு தளத்தின் மீது மையத் துவாரமிடுவதற்கு வசதியாக ஓர் உலோகத் துண்டில் துரப்பணம் செய்யப்படும் துவாரம்.

Leading: (அச்சு.) வரி விரிவாக்கல்: அச்சுப்பணியில் வரிகளின் இடை வெளியை அகலமாக்குவதற்கு ஈயத் தகட்டுப் பாலங்களிட்டு அகலமாக்குதல்,

Leading currents (மின்.) முந்து மின்னோட்டம்: மின்னோட்டத்தை உண்டாக்கும் மின்னியக்க ஆற்றலின் முன்னோடியான உச்ச நீச அளவுகளை எட்டுவதற்கான மாற்று மின்னோட்டம்.

Leading edge: (வானு .)முந்து முனை: விமானத்தின் முற்செலுத்தி அலகு முனை. இதனை 'நுழைவு முனை' என்றும் கூறுவர்.

Lead joint (கம்.) ஈய இணைப்பு: ஒரு மணிக்கும் மூடு குமிழுக்குமிடை யிலான வளையவடிவ'இடைவெளிக்குள் உருகிய ஈயத்தை ஊற்றி, பின் னர் கூர்முனையை இறுகப் பொருத்துவதன் மூலம் செய்யப்படும் இணைப்பு.

Lead monoxide: (வேதி.) ஈய மானக்சைடு (PbO): மஞ்சள் நிற