பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



Str

564

Str


Strati form : அடுக்கியல் வடிவு : படுகையடுக்குகளாக உருவாகிற வடிவம்.

Stratigraphy: அடுக்கியல் ஆய்வு : அடுக்கியற் படிவாக்கக் கூறுகளின் தொகுதி பற்றிய ஆய்வு,

Stratocruiser :மீவளி மண்டல வானூர்தி: காற்று மண்டலத்தின் மேன் முகட்டுத் தளத்திற்குச் செல்லத் தக்க விமானம்.

Stratosphere : மீவளி மண்டலம் : தட்பவெப்ப நிலை உயரத்திற்கேற்ப மாறாமல் நிலையாக இருக்கும் காற்று மண்டலத்தின் ஏழு கல்லுயரத்திற்கு மேற்பட்ட அடுக்கு.

Straw board : வைக்கோல் அட்டை: முற்றிலும் வைக்கோல் கூழினாலான அட்டை.

Stream-anchor : இழுவை நங்கூரம் : கப்பலை நிலம் நோக்கி இழுக்கும் போது பயன்படும் சிறு நங்கூரம்,

Streamline : (வானூ.) இழை வரி : ஒழுகு நீர்மம் பின்பற்றும் இயல்தளக்கோடு.

Strength of current : (மின்.) மின்னோட்ட வலிமை : ஒரு மின் சுற்று வழியாகப் பாயும் மின்னோட் டத்தின் ஆம்பியர் எண்ணிக்கை.இது நீர்க் குழாயில் ஒரு நிமிடத்தில் பாயும் நீரின் காலன் அளவு

போன்றது.

Stress : (மின்.) இறுக்கவிசை : ஒரு பொருளின் வடிவத்தை அல்லது வடிவளவை மாற்றுவதைத் தடை செய்கிற அகவிசை.

Stress accelerated corrosion : (உலோ.) இறுக்கவிசை முடுக்கு அரிமானம் : உலோகத்தில் இறுக்க விசை அதிகரிப்பதால் உலோகத்தின் அரிமானம் முடுக்கி விடப்படுகிறது. இந்த அரிமானம் சில உலோகக் கலவைகளை விட எஃகில் அதிகம்.

Stretch : நீட்சி : வினை வேகத்தைக் குறைத்தல்.

Stretcher: கிடைச் செங்கல் சுவர்: முகப்பு நீளவாட்டுக் கிடைச் செங்கல்.

Stria: (குழை,) படுகைவரி: மேற் பரப்பில் உள்ள படுகைக் கோட்டு வரி அடையாளம்.

String course or sailing course; சுற்றுவரி மேடை: கட்டிடச் சுற்றுவரி மேடை, செங்கல் அல்லது கல்லினாலான அலங்கார அமைப்பு.

Stringer : (க.க ) இடையினை தளம்; படிக்கட்டுகளிலுள்ள இடையிடைதளம்.

Stroke: (தானி. பொறி ) உகைப்பு: உந்துதண்டு ஒருமுறை உகைத்துச் சுழலும் இயக்கம்.