பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Struetural load: (பொறி.) கட்டமைப்புப் பளு: எந்திரத்தின் கட்டமைப்பினால் உண்டாகும் பளு. இது ஏற்றிய பளுவிலிருந்து வேறுபட்டது.

Structural steel: (பொறி.) கட்டமைப்பு எஃகு: பாலங்கள், கட்டிடங்கள் கட்டுவதற்குப் பொறியியல் வல்லுநர்கள் பயன்படுத்தும் பல்வேறு கட்டமைப்புகள் கொண்ட எஃகு வடிவங்கள். இவை 1. H, Z முதலிய பல்வேறு வடிவங்களில் அமைந்திருக்கும்.

Strut: விட்டக்காழ்: விட்டத்தின் குறுக்காக உறுதி நாடி இடப்படும் இரும்பு அல்லது மர ஆப்பு.

Strut girder: விட்டக்காழ் தூலம்: குறுக்குச் சட்டத் துாலம். இதன் உச்சி உறுப்பும், அடி உறுப்பும் செங்குத்தான விட்டக்காழ்களால் இணைக்கப் பட்டிருக்கும்,

Strut tenon: (மர.வே.) விட்டக்காழ் பொருத்து முளை: கனமான வெட்டு மரங்களில் உறுதி நாடி விட்டத்தின் குறுக்காக இடப்படும் பொருத்து முளை.

Stucco : குழைகாரை : சுவர்ப் பூச்சுச் சிற்ப ஒப்பனைக்குரிய அரைச் சாந்து.

Stuck molding: (க.க.)ஒட்டுவார்ப்படம்: தரைத் தளத்திலோ மேசையிலோ ஒட்டிக் கொள்ளக்கூடிய வடிவத்தில் அமைந்த வார்ப்படம்.

Stud : (க.க.) குமிழ் முகப்பு :

Stu

585

Sub


ஒப்பனைக் குமிழ் முனைப்புப் பரப்பு.

Stud bolt : மரை திருகாணி:திருக்குக் குறடு பற்றிக்கொள்வதற்கு இடமளிக்கும் வகையில் இருமுனைகளிலும் வெற்றிடத்துடன் திருகிழை அமைக்கப்பட்ட மரையாணி,

Stud gear : (எந்.) குமிழ்ப் பல்லினை : குமிழ் மீது அமைந்த ஓர் இடைநிலைப் பல்லிணை.

Stuffing box : (எந்.) உள் திணிப்புப் பொறியமைவு : காற்று முதலியவை உட்புகாதவாறு இயங்கவல்ல உள் திணிப்புப் பொறியமைவு.

Stuffing regulator : உள் திணிப்பு ஒழுங்கியக்கி : மெத்தை திண்டு வேலைப்பாட்டில் உள் திணிப்பில் ஏற்படும் மேடு பள்ளங்களைச் சீராக்கிச் சமப்படுத்தப் படும் கருவி. இது 6'முதல் 10” நீளத்தில் கூம்பு வடிவில் ஊசி போல் அமைந்திருக்கும்.

Stunt or dunt : திடீர் வெடிப்பு: குளிர்விக்கும் போது திடீரென ஏற்படும் வெடிப்பு அல்லது பிளவு.

style : பாணி : ஒரு குறிப்பிட்ட காலத்தில் செல்வாக்குப் பெற்ற ஒப்பனைப் பாணி அல்லது கலைப் பண்பின் மாதிரி,

Sub-base : (க.க.) அடித்தள அகடு : ஒர் அடித்தளத்தின் அடிப்பகுதி.