பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

படுகின்றன. இது வார்ப்பிரும்பை கடினமானதாகவும், வெண்மையானதாகவும் ஆக்கி விடுகிறது. மெல் லிரும்பில் அல்லது எஃகில் கந்தகத்தில் கந்தகம் மிகச் சிறிதளவு இருந்தாலும், அதனால் சிவப்புக் குறைபாடு உண்டாகிறத

Sulphuric acid : கந்தக அமிலம் (H.2So4) :இது கந்தகத் திராவகம், கந்தகத்தை அனலில் வாட்டி அல்லது அயப் பைரைட்டை அல்லது பிற சல்பைடுகளை அனலில் வாட்டி, அதனால் உண்டாகும் டையாக்சுடன் ஆக்சிஜனைச் சேர்த்து, அந்தக் கலப்புப் பொருளை நீருடன் கலப்பதன் மூலம் இந்த அமிலம் தயாரிக்கப்படு கிறது. கலை வேலைப்பாடுகளிலும், சேம மின் கலத்தில் மின் பகுப்பானாகவும், மசகு எண்ணெயாகவும் பயன்படுகிறது

Sump : கட்டுதொட்டி : சுரங்கம், எந்திரம் ஆகியவற்றில் மழை நீர், கழிவு நீர் ஆகியவற்றைச் சேக ரிப்பதற்கான கட்டுகுழி.

Sun compass : (வானூ.) சூரியத் திசைகாட்டி : காந்த வட, தென் துருவ திசைக்குப் பதிலாக சூரியனின் திசை பயன்படுத்தப்படும் திசை காட்டி,

Superbronze (உலோ.) மிகு நேர்த்தி வெண்கலம் : இது அரிமானத்தை எதிர்க்கக்கூடிய மிகுந்த விறைப்புத் தன்மை வாய்ந்த, அலுமினியமும், மாங்கனீசும் அடங்கிய,

Sup

567

Sup


வலுவான பித்தளை.

Super charge (வானூ.) மீவிசையேற்றம் : உந்துகலம், விமானம் முதலியவற்றில் நிலவர அழுத்தத் திற்கு அதிகமாக காற்று அல்லது கலவையை அடைத்தல்.

Super charged engine : (வானூ.) மீவிசையேற்ற எஞ்சின் : விமானம் மிக உயரத்தில் பறப்பதற்காக எஞ்சினுக்கு மீவிசையேற்றம் செய்தல்.

Super heated steam : மிகு வெப்ப நீராவி: நீராவி எந்த அழுத்த நிலையில் உண்டாகியதோ அந்த அழுத்தத்திற்கு நேரிணையான வெப்ப நிலையை விட அதிக வெப்ப நிலையுடைய நீராவி.

Super imposition : மேற் சுமத்தீடு : தொலைக்காட்சியில் ஓர் ஒளிப்படக் கருவியிலிருந்தும் உருக் காட்சியின் மீது இன்னொரு ஒளிப்படக் கருவியிலிருந்து வரும் உருக் காட்சி படியச் செய்தல். உருக் காட்சிகளை வேண்டிய அளவுக்கு ஒருங்கிணைத்தல்.

Superior figures or letters : (அச்சு.) வரிமேல் உருவம் அல்லது எழுத்து : அச்சுக்கோப்பில் ஒரு வரிக்கு மேலாக அமைக்கப்படும் சிறிய உருவம் அல்லது எழுத்து. B3;Cn.

Super structure : மேற் கட்டுமானம் : ஒரு கட்டிடத்திற்கு மேலே கட்டப்படும் கட்டுமானம்,