பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



Sur

568

Swa


Supplement of an angle : துணைக்கோணம் : கோணத்துடன் இணைந்து நேர்க்கோணமாகும் துணைக்கோணம்.

Surd : (கணி.) பகுபடா எண் : பதின் கூற்றில் தீராக் கீழ்வாய்ப் பின்னம்.

Surface action : (இயற்.) மேற் பரப்பு வினை : மேற்பரப்பில் விளைவுகளை உண்டாக்கும் வினை . எடுத்துக்காட்டு: வண்ணம் பூசிய பரப்பில், புகை, ஈரம் முதலியவற்றின் வினை.

Surface gauge : மேற்பரப்பு அளவி : எந்திர நுட்பாளர்கள் உள்வரியிடுவதற்குப் பயன்படுத்தும் கருவி.

Surface grinding : (உலோ.) மேற்பரப்புச் சாணை : தட்டையான உலோகப் பரப்புகளைச் சாணையிட்டுத் தீட்டுதல்.

Surfaces speed : (எந்.) மேற் பரப்பு வேகம் : ஒரு மேற்பரப்பு ஒரு நிமிடத்திற்கு எத்தனை அடி நகர்கிறது என்பதைக் குறிக்கும் இயக்க வீதம். இது ஒரு நேர்கோட்டில் இயங்கும் பரப்பையோ நீள் உருளை வரை கோட்டில் இயங்கும் பரப்பையோ குறிக்கும். எடுத்துக் காட்டாக, ஒரு சக்கரத்தின் மேற்பரப்பு வேகத்தைக் கணக்கிடுவதற்கு அடிக்கணக்கிலான அதன் சுற்றளவை, அது ஒரு நிமிடத்தில் சுழலும் சுழற்சிகளின் எண்ணிக்கை யினால் பெருக்குதல் வேண்டும்.

Surveying: நிலா அளவை: நிலத்தை அளவிடும் அறிவியல்,

Surveyors compass: நிலா அளவையாளர் திசைகாட்டி: கிடைமட்டக் கோட்டிற்கும் ஒரு காந்தமுள்ளுக்கு மிடையில் திசை வேறுபாட்டைக் குறிக்கும் கருவி. இதனை அளவையாளர்கள் பயன்படுத்துகிறார்கள்.

Suspension (வேதி.) மிதவல்: நீர்மத்தில் மேலுமில்லாமல் கீழுமில்லாமல் இடைமிதவலாக மிதக்கும் மிதவைப் படலம்.

Swab : (வார்.) ஒத்துப்பட்டை: வார்ப்படத்தில் ஒரு தோரணியைச் சுற்றியிருக்கும் மணலை ஈரத்தில் ஒற்றியெடுக்கும் துணித்துண்டு அல்லது உறிஞ்சு பஞ்சு,

Swag : தோரணம் : அறைகலன்களை அலங்காரமாகச் செய்வதற்கான தோரண வடிவமைப்பு.

Swage : பணியிரும்பு : பதிவச்சுப் பொறியினால் வடிவம் கொடுப்பதற்குப் பயன்படும் பணியிரும்பு.

Swage block : பதிவச்சுருக் கட்டை: பணியிரும்பை உருவாக்குவதில் பயன்படும் துளை பள்ளங்களையுடைய கட்டை.

Swash letters: (அச்சு.) வளைவுக் கோட்டு எழுத்து: அச்சுப் பணியில் வளைவு கோடுகளினாலான அலங்கார எழுத்துக்கள்.