பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

574

Tamo, japanese ash: (மர.வே.) ஜப்பானி தாமோ சாம்பல்: தாமோ, ஜப்பானில் சாம்பல் (மரவேலை) ஃபிராக்சிமஸ் மஞ்சூரியா இப் பொருளானது, நிறத்திலும் தன்மையிலும் பெரும் வித்தியாசம் கொண்டது. இருக்கைச் சாதனங்கள், அறைத்தடுப்பு, அழகுச் சுவர் போன்று பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு நிறையப் பயன்படுத்தப்படுகிறது. தாமோ நேர்த்திப் பூச்சு மூலம் மரத்தின் கீற்றுப் பாணிகள் மிக எடுப்பாகத் தெரியும்.

Tamp; கெட்டித்தல்: வெடிப்பாற்றல் பெருக்கும்படி வெடிச் சுரங்க வாயில் களிமண் திணித்து வைத்தல்.

Tamping: (பொறி.) கெட்டித்தல்: சிறு கற்கள் போன்ற பொருள்களைப் பதித்து அடித்து கெட்டித்தல். ஒரு மாதிரிப் பாணியைச் சுற்றி மண்ணை வைத்துத் தட்டுதல்,

Tanbark: பதனிடு பட்டை: ஒக் மரத்தின் பட்டை போன்று டானின் அடங்கிய மரத்தின் பட்டை. தோல் பதனிடப் பயன்படுத்திய பின்னர் ஒரளவில் எரி பொருளாகப் பயன்படுவது.

Tandem airplane: (வானூ.) அடுக்கு இறக்கை விமானம்: ஒரே மட்டத்தில் முன்னும் பின்னுமாக அமைந்த இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இறக்கை களைக் கொண்ட விமானம்,

Tang: முனை: விளிம்பு ஒரு வெட்டுக் கருவியின் கழுத்து அல்லது பிடிக்குள்ளாக செருகப்படும் பகுதி.

Tangent: தொடுகோடு: குறுக்காக வெட்டிச் செல்லாமல் ஒரு கோட்டை அல்லது பரப்பை ஒரு புள்ளி யில் தொடுதல் - தொடுகோடு.

Tangent of an angle; (கணி.) இருக்கை: ஒரு கோணத்துக்கு எதிரே உள்ள பக்கத்தை அருகில் உள்ள பக்கத்தால் வகுத்து வரும் ஈவு.

Tangible : தொட்டுணரத்தக்க : தெளிவாக உணரமுடிகிற, உண்மையான.

Tank : (தானி, எந்.) தொட்டி: மோட்டார் வாகனம் ஒன்றில் பெட்ரோல் நிரப்பப்படும் தொட்டி.

Tannin or Tannic acid: (வேதி) டானின் அல்லது டானிக் அமிலம் : பளபளப்பான சற்று மங்கலான மஞ்சள் ஒழுங்கற்ற பொடி (C14H10 O9) கால்நட், சுமாக், தேயிலை போன்றவற்றிலிருந்து பழுப்பான வெள்ளைப் பளபளப் புள்ள செதில் போன்ற வடிவில் கிடைப்பது. மருத்துவத்தில் இது உடல் திசுக்களை சுருங்கவைக்கும் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

Tantanium: (உலோ) டான்டானியம்: டேன்டலைட்டிலிருந்து பெறப்படுகிற, அமிலத்தை எதிர்க்கும்