பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Telegraph-key: தந்தி மின்னோட்ட இயக்கமைவு: தந்தித் துறையில் மின்னோட்டத்தைப் பாய்ச்சவோ தடுக்கவோ வகை செய்யும் பொறியமைவு.

Telekinema: தொலைக்காட்சி மூலம் திரைப்படங்கள் காட்டும் திரைக் காட்சி,

Telemeter: தொலைவுமானி: நில அளவையிலும் பீரங்கி சுடும் பயிற்சியிலும் தொலைவைக் கணிப் பதற்கான கருவி.

Telemeter: தொலைக் கணிப்பியல்:

Telephone : (மின்.) தொலைபேசி: குரலை நீண்ட தொலைவுகளுக்கு மின் சிக்னல் வடிவில் அனுப்புவதற் கான சாதனம்.

Telephone drop : (மின்.) தொலைபேசி விழுதுண்டு: தொலை பேசி சுவிட்ச் பலகையில் கவன ஈர்ப்புத் துண்டுகளில் ஒன்று. கீழே விழும் போது தொலைபேசி தொடர்பாளியின் கவனம் ஈர்க்கப்பட்டு ஒருவர் தொடர்பு கோருகிறார் என்பதை அறிந்து கொள்வார்.

Telephone exchange : (மின்.) தொலைபேசி இணைப்பகம்; ஒரு பிரிவுக்குள் தொலைபேசி வைத்திருப்போர் இடையிலும், பிற இணைப்பகங்கள் மூலம், தொலை பேசி கட்டமைப்புக்குள்ளான வேறு ஒரு தொலைபேசியுடனும் இணைப்புகளை அளிக்க சுவிட்ச் பலகைகளைக் கொண்ட மத்திய

579

அமைப்பு.

Telephone hook switch : தொலைபேசி கொக்கி விசைக்குமிழ்:தொலைபேசியில் ரிசீவரின் எடை காரணமாகச் செயல்படுகின்ற பிரிநிலை நெம்புகோலினால் கட்டுப் படுத்தப்படும் சுவிட்ச். தொலைபேசி மணி அடிப்பது, மற்றும் பேசுவதற்கான சர்க்கிலும் செயல்படுவது ஆகியவற்றைக் கட்டுப்படுத்தப் பயன்படுவது.

Telephony : தொலைபேசி இயக்கம்: ஒரு தொலைபேசி அல்லது தொலைபேசிகள் தொகுப்பின் இயக்கம்.

Telephoto lens : தொலைநோக்கி லென்ஸ்: மிகத் தொலைவில் உள்ள பொருட்களின் மிகப் பெரிய காட்சி களை அளிப்பதற்காகப் பயன்படும் மிகக் குறுகிய கோணமுள்ள லென்ஸ்.

Telescope : (இயற்.) தொலைநோக்கி: தொலைவில் உள்ள பொருளின் தெளிவான, பெரிய காட்சியைப் பெறுவதற்காகப் பயன்படும் பார்வைக் கருவி.

Television : தொலைக்காட்சி: தொலைவில் நடப்பதைக் காணும் சாதனம். ஒரு காட்சியை வரியீடு முறையின்படி சிறு சிறு துணுக்குகளாகப் பிரித்து எண்ணற்ற நுண்ணிய மின் சைகைகளாக மாற்றி அனுப்பும் ஒரு வகை தகவல் தொடர்புச் சாதனம். பெறப்படும் மின் சைகைகள் மறுபடி ஒளி-நிழல் துணுக்குகளாக மாற்றப்படும்