பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

580

போது தொலைக்காட்சித் திரையில் ஆரம்பத்தில் படமாக்கப்பட்ட அசல் காட்சியாகத் தெரிகிறது.

Television Camera tube: தொலைக்காட்சி படக் குழாய் : ஒரு காட்சியில் ஒளி, நிழல் பகுதிகளை மின் குறிகளாக மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படும் மின்னணுக் குழாய்.

Tell tale : (எந்.) நிகழ்ச்சி பதிவிட்டுக்கருவி: எந்திரம் அல்லது வேலையின் ஒரு பகுதி மீது இணைக்கப்பட்ட தற்காலிகக் கருவி குறிப்பிட்ட வேலை செய்து முடிக்கப்பட்டது அல்லது இயக்கத்தின் திசை மாற்றப்பட வேண்டும் என்பது போன்ற தகவலை பணியாளருக்குத் தெரிவிக்கும் நோக்கம் கொண்டது.

Temperature: (இயற்.) வெப்ப நிலை: ஒரு பொருள் பெற்றுள்ள வெப்பத்தின் அளவு,

Tempering: குவியமாகு: வேலைக்கு ஏற்ற வகையிலான அளவுக்கு உருக்கிற்கு கடினத் தன்மையை ஏற்றுவதற்கான பக்குவ முறை.கரிம உருக்குகளைப் பொருத்தவரையில் ஒரு உருக்குத் துண்டை மிகச் சிவந்த நிலைக்குச் குடேற்றி அதை எண்ணெய் அல்லது நீரில் அமிழ்த்தி எடுத்து நிறத்தைச் சோதித்தபின் இறுதியாக அமிழ்த்துவர். விசேஷ உருக்குகள் வெப்பப் பக்குவ முறையில் கடினமாக்கப்படுகின்றன.

Tempering sand: (வார்.) மணல் பதமாக்கு: அச்சுகளைத் தயாரிப்பதற்காக வார்ப்பட மணலுடன் நீரைச் சேர்த்துத் தகுந்த ஈரப்பதத்தை அளித்தல்,

Template: (எந்.) வடிவத் தகடு: தற்காலிகமான வடிவக் குறிப்பு அல்லது மாடல். இதைப் பயன்படுத்தி வேலை வடிவம் குறிக்கப்படுகிறது. அல்லது செய்த வேலையின் வடிவம் சரியா என்று இதைப் பயன்படுத்தி சோதிக்கப்படுகிறது.

Temple or tenter hook: குறுக்குக் கழி: கையால் நெசவு செய்யும் துணி ஒரே சீரான அகலத்தில் இருக்கும் வகையில் துணியை விறைப்பாக இழுத்துப் பிடித்து வைத்திருக்கும் சாதனம்.

Tenacity: கெட்டிமை: கிழித்தெறிய முற்படுகிற விசைகளை எதிர்த்து நிற்க ஒரு பொருளுக்கு உள்ள தன்மை.

Tenon: (மர.வே) நாக்கு: ஒரு மரக் கட்டையின் விளிம்பில் தனியே புடைத்து நிற்கும் நாக்கு. இது செதுக்குத் துணையுடன் மிகச் சரியாகப் பொருந்தும். இது செதுக்குத் துளை நாக்கு இணைப்பு எனப்படும்.

Tenom saw: (மர,வே.) முதுகு ரம்பம்: வேலை மேடை மீது மரத் தொழிலாளர் பயன்படுத்துகிற முதுகுப் புறத்தில் கெட்டிப் பட்டையுள்ள சாதாரண முதுகு ரம்பம்.