பக்கம்:அறிவியல் கலைச்சொல் களஞ்சியம்-இறுதிப்பகுதி.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

582

தரை, சிமெண்டில் பல் வண்ணக்கல் துண்டுகளைப் பதித்து பாவிய தரை.

Tertiary color: மூன்றாம் வகை வண்ணம்: ஆரஞ்சு, பச்சை, ஊதா போன்ற இரண்டாவது வகை வண்ணங்களை இரண்டிரண்டாகக் கலப்பதன் மூலம் பெறப்படும் ஒரு வண்ணம். இதன்மூலம் ஆலிவ், எலுமிச்சை, சிவந்த பழுப்பு வண்ணங்கள் பெறப்படும்.

Tessera: (க.க.) பல்வண்ணப் பட்டைத் துண்டுப் பாளம்: மொசைக் தாழ்வாரம், நடைகள் ஆகிய வற்றை அமைக்கப் பயன்படுகிற சிறிய சதுர வடிவிலான கல் அல்லது ஒடு.

Test bar: (வார்.) சோதனைக் கட்டை: பழுப்பு வார்ப்பு இரும்புத் துண்டை வைத்து சோதனை. அதன் குறுக்கு வாட்டு வலிமை, உடையும் தன்மை, சுருங்கும் தன்மை; குளிர்வடையும் தன்மை கெட்டித் தன்மை ஆகியவை சோதிக்கப்படும். சோதனைக்கான இத்துண்டுகள் பொதுவில் 11/4 அங்குல குறுக்களவும் 15 அங்குல நீளமும் உடையவை.

Test bench: (தானி.மின்.) சோதனை மேடை: தானியங்கி மின் சாதனங்களை சோதிப்பதற்குப் பல்வேறு கருவிகள் மற்றும் அளவு மானிகள் இணைக்கப்பட்ட ஒரு பெஞ்சு அல்லது மேஜை.

Tester: கட்டில் மேற்கட்டு: படுக்

கைக்கு மேலே படுக்கைக் கால்கள் தாங்கி நிற்கிற விதானம்.

Testing: (எந்.) சோதித்தல்: எந்திரக் கருவிகள் அல்லது மின் சாதனம் வேலைக்கான நிலையில் உள் ளனவா என்று கண்டறிவதற்கான ஒரு முறை.

Testing machine: (பொறி) சோதிப்பு எந்திரம்: ஒரு பொருளின் உறுதி மற்றும் இழுவைத் தன்மையை சோதிப்பதற்கான ஒரு எந்திரம்.

Testing set: (மின்.) சோதனை செட்: வயரிங் அல்லது ஒரு சாதனம் நல்ல செயல் நிலையில் உள்ளதா என்று நிர்ணயிப்பதற்கான கருவிகள், அல்லது சாதனங்கள்.

Test lamp : (மின்.) சோதனை விளக்கு: நன்கு காப்பிடப்பட்ட பொருத்திக்குள் அமைந்த சாதாரண மின் பல்பு.

Test pattern : சோதனைப் பாணி: பல கோடுகள்.வளையங்கள் முதலியவை அடங்கிய ஒரு வரைபடம். மெறு கருவியை சோதித்து சரிப் படுத்துவ தற்காக அனுப்பப்படுவது. அனுப்பு கருவியை சோதிப்பதற்குப் பயனாவது .

Tetraethyl lead (வேதி.) டெட்ரா எத்தில் காரீயம்: நச்சுத்தன்மையுள்ள எளிதில் ஆவியாகிற திரவம். என் ஜினில் கோட்ட இலக்கத்தைக் குறைப்பதற்கும் பெட்ரோலுடன் சிறிதளவு சேர்க்கப்படுவது.